search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்ப நலம்"

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சையில் விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்ததை தொடர்ந்து துணை இயக்குனர் (குடும்ப நலம்) டாக்டர் மணிமேகலை, மற்றும் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் செந்தில்குமார், மற்றும் டாக்டர்கள் மாவட்ட கலெக்டர் பழனி யை நேரில் சந்தித்து கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம் நடக்கிறது.
    • குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை, இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் இருக்காது.

    விருதுநகர்

    கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொண்டு நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை செய்யும் ஆண்களுக்கு ரூ.3 ஆயிரத்து 300 வழங்கப்படும்.

    பெண்களுக்கு செய்யும் குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சையை விட ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.

    இந்த சிகிச்சை மிக மிக எளிமையானது. மிகவும் பாதுகாப்பானது. பயப்பட தேவையில்லை. மயக்க மருந்து கொடுப்ப தில்லை. 5 நிமிடங்களில் செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை கிடையாது. தையல் போடுவது கிடையாது. மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை, சிகிச்சை முடிந்தவுடன் வீடு திரும்பலாம். குழந்தை பிறப்பிற்கு மட்டுமே தடை, இல்லற இன்பத்திற்கு எவ்வித தடையும் இருக்காது. எப்போதும் போல உறவு கொள்ளலாம்.

    அலுவலர்கள், பணியாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாய வேலை செய்வோர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வெடி மருந்து கம்பெனி மற்றும் பிரிண்டிங் பிரஸ் போன்ற கடினமான வேலை செய்வோர்கள் கூட செய்து கொள்ளலாம்.

    கருத்தடை சிகிச்சைக்கு பின்னரும் முன்னர் செய்த அதே வேலையினை எவ்வித களைப்பும் இன்றி எப்போதும் போல இயல்பாக செய்ய முடியும். இதில் ஆண்மைக்குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

    குறிப்பாக ரத்த சோகை, இதய நோய் மற்றும் பிற மருத்துவ காரணங்களினால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத தாய்மார்களின் கணவன்மார்கள் தாமாக முன் வந்து கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×