என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய வாக்காளர்கள்"
- வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொள்ள வேண்டும்.
- உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைவரும் இணைந்து இந்த பணியினை செய்து முடித்திட வேண்டும்.
சென்னை:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் தா.மோ. அன்பரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்று, 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும் - வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும், தொகுதியில் இருந்து இடம் மாறியவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போது உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொள்ள வேண்டும்.
இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை), 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார்.
எனவே, இந்த 2 நாட்கள் மாவட்டம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களில் வாக்காளர்களை சேர்க்கும் பணியிலும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வார்டு கிளை கழக செயலாளர்கள், வாக்குச்சவாடி நிலை முகவர்கள், வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைவரும் இணைந்து இந்த பணியினை செய்து முடித்திட வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொண்டு அனைவரும் இணைந்து இப்பணியை செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆன்லைன் மூலமாக 6 ஆயிரத்து 390 பேர் பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.
- மடத்துக்குளம் தொகுதியில் மட்டும் 2 ஆயிரத்து 420 பேர் பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமும் சேர்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடந்த முகாம்களில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 ஆயிரத்து 759 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் மூலமாக 6 ஆயிரத்து 390 பேர் பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி மொத்தம் மாவட்டத்தில் பெயர் சேர்க்கைக்கு மட்டும் 27 ஆயிரத்து 149 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 5 ஆயிரத்து 600 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் வடக்கு தொகுதியில் 4 ஆயிரத்து 8 பேரும், தாராபுரத்தில் 2 ஆயிரத்து 186 பேரும், காங்கயத்தில் 3 ஆயிரத்து 463 பேரும், அவினாசியில் 3 ஆயிரத்து 559 பேரும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 3 ஆயிரத்து 130 பேரும், உடுமலையில் 2 ஆயிரத்து 661 பேரும், மடத்துக்குளத்தில் 2 ஆயிரத்து 542 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய 10 ஆயிரத்து 477 பேரும், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 12 ஆயி–ரத்து 949 பேரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். பல்லடம் தொகுதியில் மட்டும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆயிரத்து 168 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆன்லைன் மூலமாக பெயர் நீக்கம் செய்ய மொத்தம் 7 ஆயிரத்து 556 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மடத்துக்குளம் தொகுதியில் மட்டும் 2 ஆயிரத்து 420 பேர் பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு இதுவரை மொத்தம் 50 ஆயிரத்து 575 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்