search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவிலுக்கு சீல்"

    • ராஜபாளையம் அருகே கோவிலுக்கு சீல் வைக்க சென்ற தாசில்தாரை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • சாமி கும்பிடுவதில் இருதரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை வளர்ந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மேல தெரு கீழத்தெரு என பிரித்து 500 குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இந்த மக்கள் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஓராண்டு மேல தெருவுக்கு என்றும், அடுத்த ஆண்டு கீழ தெருவுக்கு என்றும் முறை வைத்து சாமி கும்பிட்டு வருகின்றனர்.

    சாமி கும்பிடுவதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை வளர்ந்த நிலையில், நேற்று ஒரு பிரிவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இருதரப்பினரையும் அழைத்து ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து அமைதி கூட்டம் நடத்தப்பட்டது. தற்காலிகமாக கோவிலை மூடி சீல் வைப்பது என்று இருதரப்பு நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் முன்னி லையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோர்ட்டு மூலம் தீர்ப்பு கிடைத்த பின்னர் கோவிலை திறந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து கையெழுத்து போட்டுள்ளனர்.

    அதன் அடிப்படையில் நேற்று கோவிலுக்கு சீல் வைப்பதற்காக ராஜ பாளையம் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்ட ராமன் சென்றார். அவரை முற்றுகையிட்ட பெண்கள் கோவிலுக்கு சீல் வைக்க கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாமி ஆடி கோவிலுக்கு சீல் வைக்கக் கூடாது, சீல் வைத்தால் விளைவுகளை சந்திப்பீர்கள் என சத்தமிட்டு பிரச்சினையில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் ேபாலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கோவிலுக்கு சீல் வைத்து செல்கிறோம், நீங்கள் கோர்ட்டு மூலம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கோவிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×