என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போர்வெல் கிணற்றில்"
- சம்பவத்தன்று மதியம் சீனிவாசன்.போர்வெல் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்துள்ளார்.
- தண்ணீர் கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட மைலாடி வெள்ளியங்காடு பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். விவசாயி. இவரது தோட்டத்தில் போர்வெல் அமைத்து விவசாயம் செய்து வருகிறார், மேலும் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்.
கடந்த ஒரு மாதகாலமாக தொடர் மழை பெய்து வந்ததால் போர்வெல்லில் தண்ணீர் எடுக்க வில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் போர்வெல் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்துள்ளார்.
தண்ணீர் கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. அவரும் ஒரு மணி நேரம் தண்ணீர் தொடர்ந்து மோட்டார் வைத்து எடுத்தும் தண்ணீர் நிறம் கறுப்பாகவே இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி உடனடியாக உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஊராட்சி வார்டு கவுன்சிலர் மோகனசுந்தரி பழனிசாமி, சென்னிமலை யூனியன் துணை தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த போர்வெல் கிணற்றில் சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய சாய கழிவு கலந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த புகாரின் பேரில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி கள் இந்த சாய ஆலைகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.