search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவாக அளித்த"

    • கரும்பு லாரி மீது ஒருவர் நின்று கொண்டு கரும்புகளை யானைக்கு வீசி கொண்டிருந்தார்.
    • வனத்துறை அதிகாரிகள் யானைக்கு கரும்புகளை உணவாக அளிப்பது குற்றம் என தெரிவித்தனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.இதில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    கடந்த சில மாதங்களாக கரும்புகளை தின்று பழகிய யானைகள் சாலையில் உலா வருவதும், கரும்பு லாரியை மறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி மற்றும் கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரிகள் தினந்தோறும் சென்று வருகிறது . கரும்பை சுவைத்து பழகிய யானைகள் தொடர்ந்து சாலையில் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

    ஒரு சில லாரி டிரைவர்கள் சாலை ஓரத்தில் நிற்கும் யானை களுக்கு லாரியை நிறுத்தி கரும்புகளை வீசி செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் ஆசனூர் வனச்சரகர் சிவகுமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் வந்தனர் .

    அப்பொழுது கரும்பு லாரி மீது ஒருவர் நின்று கொண்டு கரும்புகளை யானைக்கு வீசி கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றி சென்றதும், சாலை ஓரத்தில் நின்றிருந்த யானைக்கு கரும்பை உணவாக அளித்ததும் தெரியவந்தது.

    வனத்துறை அதிகாரிகள் யானைக்கு கரும்புகளை உணவாக அளிப்பது குற்றம் என தெரிவித்தனர். இதனையடுத்து லாரி டிரைவர் கர்நாடகா மாநிலம் நஞ்சன்கூடு பகுதிைய சேர்ந்த சித்தராஜ் என்பவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    ×