search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்க ஆலோசனை கூட்டம்"

    • தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் செல்வம், நந்தகுமார், கிரேசி குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர் ராமகேசவன், பொருளாளர் காதர் மொய்தீன், உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை போராட்டம் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி சென்னையில் நடைபெறும் காலவரையற்ற காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக சிறப்பாசிரியர் சங்கர் கணேஷ் நன்றி கூறினார்.

    • எருது விடும் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்ட‌அள்ளியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஒருங்கிணைந்த எருது விடும் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சங்கத் தலைவர் வன்னிய பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் செயலாளர்கள் வெற்றிவேல், துணைத் தலைவர் கணேசன், துணை செயலாளர் சித்தராஜ், பூமணி, பொருளாளர் குண்டப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது மாடுகளுக்கு கோமாரி நோய் மற்றும் பெரியம்மை நோய், வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் அனைத்து கிராம பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்துச் செல்லும் விவசாயிகளை வனத்துறையினர் மிரட்டி வருவதை கைவிட வேண்டும். வரும் பொங்கல் பண்டிகை ஒட்டி கிராமங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் எருது நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

    இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலு, முரளி, சண்முகம், லோகநாதன், ராஜ், மகேஷ், சிவன், மற்றும் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×