search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ் விழா"

    • நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை காட்டினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூரில் உள்ள தேவாயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஏசு கிறிஸ்து பிறந்த நாள் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. பலர் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்றிருந்தனர்.

    விழாவை முன்னிட்டு பலர் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து, வண்ண ஸ்டார்களை தொங்கவிட்டிருந்தனர். பேக்கரிகளில் கேக் விற்பனை களை கட்டியது. வேலூர் மாநகரில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏசு பிறந்ததை குறிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை காட்டினர். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது.

    இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர்.

    வேலூர் சார்பனா மேட்டில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் கிறிஸ்து பிறப்பு நாளையொட்டி கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலய வளாகத்தில் குழந்தைகள் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    காட்பாடி ரோடு புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பெந்தெகொஸ்தே சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. இதேபோல குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார்.
    • விழாவை முன்னிட்டு ஸ்டார் தோரணங்களால் பள்ளி வளாகம் அலங்கரிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார். மாணவர்களின் மனநல ஆலோசகர் கணேஷ், அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர் வரவேற்று பேசினார். விழாவை முன்னிட்டு ஸ்டார் தோரணங்களால் பள்ளி வளாகம் அலங்கரிக்கப்பட்டது. பெத்லகேமில் மாட்டு தொழுவத்தில் இயேசுபிரான் பிறந்ததை விளக்கும் வகையிலான நிலைக்காட்சியை மாணவ மாணவிகள் தத்ரூபமாக நடித்துக் காட்டினார். ஆசிரியர் ஜான் சாமுவேல், எபநேசர், ஆறுமுகசாமி மற்றும் ஆசிரியைகள் சிறப்பு பாடல்கள் பாடினார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாணவ மாணவிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முடிவில் ஆசிரியர் ஜேம்ஸ் இக்னேஷியஸ் நன்றி கூறினார்.

    • இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை போற்றும் விதமாக கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாடடப்பட்டது.
    • கிறிஸ்துமஸ் பாடல், நாடகம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இச்சிப்பட்டியில் அமைந்துள்ள யங் இண்டியா பப்ளிக் பள்ளியில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை போற்றும் விதமாக கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாடடப்பட்டது. இதனையொட்டி பாரம்பரிய முறைப்படி கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் பாடல்,நாடகம்,உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு யங் இண்டியா பப்ளிக் பள்ளியின் செயலா் டாக்டர் டி.சிவசண்முகம், மற்றும் மனோன்மணி சிவசண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளியின் முதல்வர் கே.அண்ணாமலை ,துணைமுதல்வர்கள் சசிகலா,நிஜிலாபானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

    • ரோவர் கல்வி குழுமத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது
    • பாடாலூர் பங்குத்தந்தை மாசலின் ஆண்டனி கலந்து–கொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை பற்றி கூறினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ரோவர் கல்வி குழுமத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் பெரு–விழா கோலாகலமாக கொண்டா–டப்பட்டது. இவ்விழாவிற்கு ரோவர் கல்வி குழுமத்தின் தலைவர் வரதராஜன் மற்றும் துணைதலைவர் ஜான் அசோக் வரதராஜன் ஆகி–யோர் தலைமை தாங்கி–னர். அறங்காவலர் மகாலட் சுமி வரதராஜன் முன்னிலை வகித்தார். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பாடாலூர் பங்குத்தந்தை மாசலின் ஆண்டனி கலந்து–கொண்டு இயேசு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை பற்றியும், யார் உங்களின் ஊக்கம் அளிப்பவர், உச்சா–கப்படுத்துபவர் என்பதை கண்டறிவதை பற்றியும், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் ரோவர் கல்வி குழும தலைவர் வரதரா–ஜன் திருக்குறளின் பெருமை–யையும், இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் பற்றியும் மேலும் மூடநம்பிக்கைகளா அல்லது அறிவியலின் உச்சமா என்பது பற்றியும் சிறப்பாக உரையாற்றினார். அலுவலக மேலாளர் ஆனந்த் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் சக்தீஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வி–ழாவில் ரோவர் கல்வி நிறுவனத்தை சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள், அலுவலக மேலா–ளர்கள் ஆசிரிய பெரு–மக்களும் அலுவலக ஊழி–யர்களும் கலந்து கொண்டனர்.


    • மகிளா காங்கிரஸ் தலைவி ஷர்மிளா ஏஞ்சல் தலைமை தாங்கினார். போதகர் சாலமன் ஜெபம் செய்தார். விழாவில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
    • பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மார்த்தாண்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

    மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷர்மிளா ஏஞ்சல் தலைமை தாங்கினார். போதகர் சாலமன் ஜெபம் செய்தார். விழாவில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் படங்களுடன் விஜய் வசந்த் எம்.பி. தயாரித்துள்ள காலண்டர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    இதில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் விஜய்வசந்த் எம்.பி. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டூவர்ட், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், அசோகன், டிஜு மற்றும் கிரிஷ்டல், ரமணி, பமலா, மெற்டில்டா, முத்துமலர், ஸ்மிதாராணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநகர முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இயேசு கிறிஸ்துவின்பிறப்பை விளக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.
    • கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பை ஆசிரியர்களின் பாடல்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆடல், பாடல்களின் மூலமாக விளக்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்துவின்பிறப்பை விளக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.

    கிறிஸ்துமஸ் தாத்தா நிகழ்ச்சியின் இடையில் வந்து குழந்தைகளை குதூகலப்படுத்தி ஆடி பாடினார். இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பை ஆசிரியர்களின் பாடல்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆடல், பாடல்களின் மூலமாக விளக்கினர்.

    விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் ,ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    • இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ்குடில் அமைக்கப்பட்டிருந்தது.
    • கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள்,ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பகுதியில் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.விழாவிற்கு லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ஆர்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

    விழாவில் பள்ளி மாணவ,மாணவிகளின் கிறிஸ்துமஸ் பாடல், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ்குடில் அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவில் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ஆர்.ராமமூர்த்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும், வரும் புத்தாண்டு பெருமையாலும்,அன்பாலும்,பண்பாலும் பிறக்கட்டும்" என புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகளை லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள்,ஆசிரியைகள் செய்திருந்தனர். 

    • லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

    சென்னை:

    சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அதன்பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    அனைவரையும் ஒருதாய் மக்களாகக் கருதி அன்பு செலுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல். சமத்துவ விழாவாக நடைபெறும் இதுபோன்ற விழாக்களில் தவறாமல் கலந்து கொள்வதை எனது கடமையாக கருதுகிறேன்.

    மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா காலத்தில் கல்வியை விட்டுச்சென்ற 2 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தது, மாற்றுத் திறனாளிகளுக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு நடைபாதை அமைத்தது போன்ற சாதனைகள்தான் தி.மு.க. அரசின் அடையாளம், சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு.

    அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான உதவித்தொகை விவகாரத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றாவிட்டால், தமிழ்நாடு அரசு முடிந்தளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

    • புனித லூக்கா தொழுநோய் மருத்துவ மனையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
    • விழாவில் கிறிஸ்துமஸ் புத்தாடைகள் மற்றும் விருந்து ஆகியவை வழங்கப்பட்டது.

    குரும்பூர்:

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் சார்பில் பேய்க்குளம் புனித லூக்கா தொழுநோய் மருத்துவ மனையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மாவட்டம், பேய்குளத்தில் உள்ள தூய லூக்கா தொழுநோய் மருத்துவமனையிலுள்ள தொழு நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தி னர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியமும் அதனுடன் இணைந்த புதுவாழ்வு சங்கமும் இணைந்து கிறிஸ்துமஸ் புத்தாடைகள் மற்றும் விருந்து ஆகியவற்றை வழங்கினர்.

    இதில் பன்னீர் செல்வம் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினர். சகோ. சாம்ஜெபராஜ் கிறிஸ்து மஸ் செய்தி வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்தார். நிறைவாக தொழுநோயாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டு, கிறிஸ்துமஸ் விருந்து பரி மாறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் சமூக தன்னார்வலர் ஹெய்ன்ஸ், பிசியோதெரபி பாக்கியராஜ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார் மற்றும் மரம், குடில் அமைப்பதற்கான பொம்மைகள் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • பியானோ, சாக்சபோன் வாசிப்பது போலவும், நடனமாடுவது போலவும், பரிசுகள் வழங்குவது போன்ற பொம்மைகளும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

    திண்டுக்கல்:

    உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூறும் வகையில் பல்வேறு நாடுகளில் ஒரு மாதமாகவே கிறிஸ்துமஸ் விழா களைகட்டி வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் வழிபாட்டுக்குகூட தடைவிதிக்கப்பபட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

    கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார் மற்றும் மரம், குடில் அமைப்பதற்கான பொம்மைகள் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதனை வாங்கிச்செல்லும் மக்கள் தங்கள் வீடுகளில் பல வண்ண விளக்குகளால் அலங்கரித்து குடில் அமைத்தும், நட்சத்திரங்களை தொங்கவிட்டும் அலங்காரம் செய்துள்ளனர்.

    குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான சாண்டாகிளாஸ் பொம்மைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பியானோ, சாக்சபோன் வாசிப்பது போலவும், நடனமாடுவது போலவும், பரிசுகள் வழங்குவது போன்ற பொம்மைகளும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளன. இதேபோல் வீடுகள் மற்றும் பேக்கரிகளில் விதவிதமான கேக்குகள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா நகரங்களில் இரவு நேர வழிபாட்டிற்கும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி அனைத்து தேவாலயங்களிலும் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுகிறது.
    • தூத்துக்குடியில் முதன்முறை யாக பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுகிறது.இதற்கான நிகழ்ச்சி வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பா.ஜ.க . தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

    நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் வக்கீல் வாரியார் வரவேற்று பேசுகிறார். வக்கீல் சின்னத்தம்பி நன்றி கூறுகிறார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி, மாநில சிறுபான்மை பிரிவு பொது செயலாளர் சதீஷ்ராஜா, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு 1000 பேருக்கு இலவச வேட்டி,சேலை மற்றும் 50 பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கி சிறப்புரையாற்றி கிறிஸ்மஸ் விழா சிறப்பு பிரார்த்தனை செய்து விழாவை கொண்டாடு கின்றனர். தூத்துக்குடியில் முதன்முறை யாக பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுவதால் பா.ஜ.க. நிர்வாகிகள் விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.

    • முன்னாள் பிரதம பேராயர் தேவகடாட்சம் பங்கேற்கிறார்
    • ஐக்கிய கிறிஸ்துமஸ் பவனி வருகிற 24-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடை பெறுகிறது.

    கன்னியாகுமரி:

    ஆனக்குழி சி.எஸ்.ஐ. ஆயர் மண்டல திருச்சபையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடப் படுகிறது. இதையொட்டி 16மற்றும் 17-ந் தேதி இரவு கிறிஸ்துமஸ் வாழ்த்து பஜனை நடந்தது.

    இன்று (18-ந் தேதி) காலை 8.30 மணிக்கு பிரார்த்தனை, அன்பளிப்புகள் விற்பனை விழா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து பஜனை நடக்கிறது. 21-ந் தேதி இரவு 8.30 மணிக்கு புதன் பிரார்த்தனை, பிரசங்க வசனப் போட்டி நடைப் பெறுகிறது. 23-ந் தேதி காலை 8.30 மணிக்கு குடும்ப பாடல் ஆராதனை, திருமறை அறிவுப் போட்டி, நன்றி மலர் மற்றும் இரு நூற்றாண்டு சிறப்பு மலர் போட்டிகளும் நடைபெறுகிறது.

    ஐக்கிய கிறிஸ்துமஸ் பவனி வருகிற 24-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடை பெறுகிறது.

    25-ந் தேதி இரவு 7 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு தொழுகை நடைபெறும் காலை 10 மணிக்கு விளையாட்டுப் போட்டி கள், இரவு 7 மணிக்கு

    ஒய்.எம்.சி.ஏ. ஆண்டு விழாவும் நடைபெறுகிறது. 26-ந் தேதி இரவு பெண்கள் ஐக்கிய சங்க ஆண்டு விழா மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளும், 27-ந் தேதி இரவு பாடகர் குழு ஆண்டு விழா, 28-ந் தேதி இரவு பக்தி முயற்சி சங்க ஆண்டு விழா நடைபெறும்.

    30-ந் தேதி மாலை 6.30மணிக்கு திருமறைப் பள்ளி ஆண்டுவிழா நடைபெறும். சிறுவர், சிறுமியர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். 31-ந் தேதி இரவு 11 மணிக்கு ஆண்டு இறுதிதுதி ஆராதனை நடுநிசி நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு ஜனவரி 1ம் தேதியை வரவேற்கும் "2023'' புத்தாண்டு உடன்படிக்கை பிரார்த்தனை மற்றும் வாக்குத்தத்த அட்டை பெறுதல், திரு விருந்து, ஆகியவை நடைபெறும்.

    ஜனவரி 1-ந் தேதி காலை 9 மணிக்கு குடும்ப ஞாயிறு தொழுகையில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பிரதம பேராயர் தேவகடாட்சம் கலந்து கொள்கிறார். மாலை 6.30 மணிக்கு ஆனக்குழி 2023 "கிராம நிகழ்வுகள் நடைபெறும். 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு வார ெஜபம், 6-ந் தேதி இரவு 9 மணிக்கு முழு இரவு ஜெபக்கூட்டம், 8-ந் தேதி காலை 10.30 மணிக்கு 'மத்திக்கோடு சேகர திரு விருந்து பிரார்த்தனை' ஆகியவை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை ஆனக்குழி சி.எஸ்.ஐ. ஆயர் மண்டலம் சபைக் குழு செய்து வருகிறது.

    ×