search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமிராக்கள் பொருத்தம்"

    • ரூ.1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • டி.எஸ்.பி. நமச்சிவாயம் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் மற்றும் இன்ஸ்பெக்ட்டர் தாமோதரன் ஆகியோர் பல்வேறு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களை அமைத்து வருகின்றனர்.

    கண்காணிப்பு காமிராக்களின் இயக்கங்கள் அனைத்தும் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள திருமலை நாயக்கன்பாளையத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் ரூ.1.5 லட்சம் செலவில் 11 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் தொடக்க விழாவில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. நமச்சிவாயம் கலந்து கொண்டு 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களை ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    கண்காணிப்பு காமிராக்கள் அமைத்துக் கொடுத்தவர்களுக்கு சால்வை அணிவித்து பா ாட்டு தெரிவிக்கப்பட்டது.

    அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் பேசும்போது, பல லட்சம் மதிப்பில் வீடுகளை கட்டுவோர் குற்ற நட டிக்கைகளை தடுக்கும் விதமாக சில ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு காமிராக்களையும் பொருத்த வேண்டும்.

    இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்றார்.

    • இரவு நேரங்களில் சில ஜோடிகள் இருட்டு மறைவில் காதல் லீலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போதை மாத்திரை கும்பல், கஞ்சா விற்பனை கும்பல், பிக்பாக் கெட் திருடர்கள் குவிந்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு பணிகள்நடந்து வருகிறது. தற்போது படகு சவாரி திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதனால் வாலாங்குளத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் காதல் ஜோடிகள் நீண்ட நேரம் சில்மிஷ லீலைகளில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

    இவர்களின் அத்துமீறல்களை அந்த பகுதியில் செல்வோர் கண்டித்தாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை.

    இரவு நேரங்களில் சில ஜோடிகள் இருட்டு மறைவில் காதல் லீலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் அந்த பகுதிக்கு சென்று காதல் ஜோடிகளை பிடித்து அறிவுரை கூறி கண்டித்தனர்.

    ஆனாலும் தொடர்ந்து காதல் ஜோடிகள் பூங்காவிற்கு வந்து கொண்டு தான் இருகிறார்கள். மேலும் வாலாங்குளத்தின் கரையில் போதை மாத்திரை கும்பல், கஞ்சா விற்பனை கும்பல், பிக்பாக் கெட் திருடர்கள் குவிந்து வருகின்றனர்.

    ஸ்மார்ட் சிட்டி பூங்கா பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளது. இங்கே மதுகுடிக்கும் போதை கும்பல் பூங்காவில் உலா வந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும் வாடிக்கையாக நடக்கிறது. போலீசார் எப்போதாவது வந்து அடாவடி கும்பலை விரட்டியும் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

    இந்த நிலையில், வாலாங்குளத்தின் முக்கிய பகுதிகளை கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டது.

    இரவு நேரத்திலும் காட்சிகளை துல்லியமாக பதிவு செய்யும் வகையில் சுழலும் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் மூலமாக குளக்கரையில் நடக்கும் அத்துமீறல்களையும், குற்றங்களையும் கண்டறிய முடியும்.

    பொது இடங்களில் அத்துமீறுவோரின் அட்டூழியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காணிப்பு காமிரா காட்சிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் பிரதான அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.மேலும் இந்த பகுதியில் காவலாளிகளை நியமித்து அடாவடி கும்பல்களை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    • தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிழங்கு மண்டிகள் என பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினசரி சுமார் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து சென்று வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் கிழங்கு மண்டிகள் என பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மேலும் மேட்டுப்பாளையம் நகர பகுதியில் வெளியூர்களுக்கு சென்று வரும் வகையில் அரசு பஸ் நிலையமும் உள்ளது.

    இதனால் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினசரி சுமார் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து சென்று வருகின்றனர்.

    இதனால் மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் செயின் பறிப்பு, அடிதடி, வாகன திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.இதில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினருக்கு கடும் சிரமம் இருந்து வந்தது.

    இதனிடையே தற்போது மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் சார்பில் மொத்தம் 58 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    இதனிடையே நேற்று மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் சிறுமுகை சாலை முதல் சிராஜ் நகர் நேஷனல் பள்ளி வரை 30 காமிராக்களும், மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலகம் முதல் மீனாட்சி வரை 30 காமிராக்கள் என மொத்தம் 60 கண்காணிப்பு காமிராக்கள் ரூ.8 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்டுள்ளன.

    இதற்கான பணிகள் முடிந்ததை அடுத்து கண்காணிப்பு காமிராக்களை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.பாலாஜி, இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகநாதன், செல்வநாயகம் உள்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். இதற்கான செலவுகளை என்.எஸ்.வி பூண்டு மண்டி உரிமையாளர் ஆறுமுகம் யு.பி.எல் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

    ×