search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலபைரவர்"

    • பிரதோஷ வழிபாடு மிகுந்த பலன் தரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.
    • ஆனால் ராமகிரி தலத்தில் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுவது இல்லை. அதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.

    சிவாலயங்களில் சமீபகாலமாக பிரதோஷம் வழிபாடு மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

    மாதத்துக்கு 2 பிரதோஷங்கள் வருகிறது.

    அந்த நாட்களில் சிவாலயங்களில் கட்டுக்கு அடங்காத கூட்டம் காணப்படும்.

    பிரதோஷ வழிபாடு மிகுந்த பலன் தரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.

    ஆனால் ராமகிரி தலத்தில் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுவது இல்லை. அதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.

    இந்த தலத்தில் உள்ள வாலீஸ்வரருக்கு எதிரே நந்தி பிரதிஷ்டை செய்யப்படவில்லை.

    பக்த ஆஞ்சநேயர் விக்கிரகம்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    அந்த ஆஞ்சநேயருக்கு பிறகுதான் அடுத்தடுத்து 2 நந்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    அதுவும் பிரகாரத்துக்கு வெளியேதான் உள்ளது.

    இத்தகைய காரணங்களில் இந்த தலத்தில் பிரதோஷம் வழிபாடு கிடையாது. பிரதோஷம் வழிபாடு நடைபெறாத ஒரே ஆலயமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.

    • ஆனால் என்ன காரணத்தினாலோ ராஜகோபுரத்தை கட்ட இயலவில்லை.
    • இதனால் திருப்பணி செய்பவர்களும் இந்த ராஜகோபுரத்தை கட்டும் முயற்சிகளில் ஈடுபடவில்லை.

    ஆலயங்களின் கம்பீரத்துக்கு அழகு சேர்ப்பது ராஜகோபுரம்தான்.

    ஆனால் ராமகிரி காலபைவரர் ஆலயத்தில் ராஜகோபுரம் இல்லை.

    இந்த ஆலயம் உருவான கால கட்டத்தில் எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்தனர்.

    சங்கமகுல விரூபாட்சராயன் என்ற மன்னன் இந்த ஆலயத்துக்கு கோபுரம் கட்ட ஆசைப்பட்டான்.

    இதற்கான ஏற்பாடுகளை செய்தான்.

    கோபுரம் கட்டுவதற்கான கருங்கற்கள் கொண்டு வரப்பட்டன. ராஜகோபுரம் கட்டும் பணியையும் அவன் தொடங்கி விட்டான்.

    இந்த நிலையில் புருஷோத்த கஜபதி என்ற மன்னன் திடீரென அவன் மீது படையெடுத்து வந்தான்.

    இதன் காரணமாக ராமகிரி ஆலயத்தின் ராஜகோபுரம் கட்டும் பணி தடைப்பட்டது.

    அதன் பிறகு வந்த பலர் அந்த கோபுரத்தை சீரமைத்து கட்ட முயற்சிகள் செய்தனர். ஆனால் யாராலும் முடியவில்லை.

    ஆந்திர மாநில அரசின் தொல்பொருள் கட்டுப்பாட்டில் இந்த ஆலயம் வந்த பிறகு ராஜகோபுரத்தை கட்ட திட்டமிடப்பட்டது.

    ஆனால் என்ன காரணத்தினாலோ ராஜகோபுரத்தை கட்ட இயலவில்லை.

    இதனால் திருப்பணி செய்பவர்களும் இந்த ராஜகோபுரத்தை கட்டும் முயற்சிகளில் ஈடுபடவில்லை.

    • தனது வாலால் லிங்கத்தை சுற்றி பலத்தை முழுமையாக திரட்டி இழுத்து பார்த்தார்.
    • ஆனால் அந்த லிங்கம் கொஞ்சம்கூட அசையவில்லை.

    ராமகிரி தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு வாலீஸ்வரர் என்று பெயர்.

    ஆஞ்சநேயர் காசியில் இருந்து ராமேசுவரத்துக்கு லிங்கத்தை எடுத்து சென்றபோது காலபைரவரின் விருப்பத்துக்கு இணங்க இந்த தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டது.

    இந்த லிங்கத்தை இங்கிருந்து ராமேசுவரம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆஞ்சநேயர் எவ்வளவோ முயற்சிகள் செய்தார்.

    தனது வாலால் லிங்கத்தை சுற்றி பலத்தை முழுமையாக திரட்டி இழுத்து பார்த்தார்.

    ஆனால் அந்த லிங்கம் கொஞ்சம்கூட அசையவில்லை.

    ஆஞ்சநேயர் நடத்திய கடும் போராட்டம் காரணமாக அந்த லிங்கம் சற்று சாய்ந்ததே தவிர நகரவில்லை.

    இதனால் ஆஞ்சநேயர் தனது முயற்சியை கைவிட்டார்.

    அந்த லிங்கம் இப்போதும் வடக்கு திசையை நோக்கி சரிந்த நிலையில் இருப்பதை பக்தர்கள் காண முடியும்.

    • ராமகிரி கால பைரவர் ஆலயத்தின் அற்புதங்களில் கோவிலுக்குள் கோவில் இருக்கும் அற்புதம் சிறப்பானது.
    • ஒரே ஆலயத்துக்குள் இன்னொரு ஆலயமும் அமைந்து இருக்கும் அதிசயம் அரிதாகவே பார்க்க முடியும்.

    ராமகிரி கால பைரவர் ஆலயத்தின் அற்புதங்களில் கோவிலுக்குள் கோவில் இருக்கும் அற்புதம் சிறப்பானது.

    ஒரே ஆலயத்துக்குள் இன்னொரு ஆலயமும் அமைந்து இருக்கும் அதிசயம் அரிதாகவே பார்க்க முடியும்.

    தமிழகத்தில் கும்பகோணம் அருகே உள்ள திருமீயூச்சூர் ஆலயத்தில் கோவிலுக்குள் கோவில் இருக்கும் அதிசயத்தை காண முடியும்.

    அதேபோன்ற அமைப்பை ராமகிரி கால பைரவர் ஆலயத்திலும் பார்க்கலாம்.

    கால பைரவர்தான் இந்த தலத்தின் பிரதான மூர்த்தி ஆவார்.

    அவரது கருவறை சன்னதி மற்றும் பிரகாரங்கள் பெரிய அளவில் அமைந்துள்ளன.

    அதேபோன்று அருகில் வாலீஸ்வரர் தனி சன்னதி உள்ளது.

    அதுவும் தனிக்கோவில் போன்றே காட்சி அளிக்கிறது.

    இதனால் கோவிலுக்குள் கோவில் அமைந்தது போன்ற அமைப்பை இந்த தலத்தில் பார்க்கலாம்.

    • எப்படி பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்பதை கோவில் குருக்களிடம் கேட்டாலே தெளிவாக சொல்லி விடுவார்.
    • எனவே உறவினர்களை பரிகாரத்துக்காக அழைத்து வர வேண்டாம் என்று கூறப்படுகிறது.

    ராமகிரி தலத்துக்கு சாதாரணமாக வழிபட செல்லும்போது உறவினர்கள், குடும்பத்தினருடன் சென்று வரலாம்.

    ஆனால் பரிகார பூஜைக்காக இந்த தலத்துக்கு உறவினர்களை எந்த பக்தரும் அழைத்து வரக்கூடாது என்பது செவிவழி செய்தியாக உள்ளது.

    குறிப்பாக குழந்தை பாக்கியத்துக்கு பரிகாரம் செய்ய செல்பவர்கள் தம்பதியர் சகிதமாக மட்டுமே சென்று வருவது நல்லது.

    எப்படி பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்பதை கோவில் குருக்களிடம் கேட்டாலே தெளிவாக சொல்லி விடுவார்.

    எனவே உறவினர்களை பரிகாரத்துக்காக அழைத்து வர வேண்டாம் என்று கூறப்படுகிறது.

    • மன்னன் அதியமானுக்கு கண்கண்ட தெய்வமாக கால பைரவரை வழிபட்டு வந்துள்ளார்.
    • குறிப்பாக அதியமான் மன்னர் போருக்கு செல்லும் முன் வாளை வைத்து பூஜை செய்வார்.

    மன்னன் அதியமானுக்கு கண்கண்ட தெய்வமாக கால பைரவரை வழிபட்டு வந்துள்ளார்.

    இதனால் அதியமான், எப்போதும் கோவிலில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்து கொள்வார்.

    குறிப்பாக அதியமான் மன்னர் போருக்கு செல்லும் முன் வாளை வைத்து பூஜை செய்வார்.

    அதன் அடையாளமாக இன்றும் இக்கோவிலில் வாள் வைத்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    கோவில் அமைவிடம்

    தருமபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் பாதையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தட்சிண காசி கால பைரவர் கோவில்.

    தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் வீதம் அதியமான் கோட்டைக்குச் செல்கிறது.

    பஸ் நிறுத்தத்துக்கு அருகிலேயே கோவில் அமைந்துள்ளது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேஷ ராசிக்காரர்கள் சிரசினை பார்த்து வணங்கினால் தோஷம் தீரும்.
    • ரிஷப ராசிக்காரர்கள் கழுத்து பகுதியை பார்த்து கும்பிட வேண்டும்.

    12 ராசிக்காரர்கள் கால பைரவரின் எந்தெந்த பகுதியை வணங்கினால் தோஷம் விலகும் என்பதை பார்ப்போம்.

    மேஷ ராசிக்காரர்கள் சிரசினை பார்த்து வணங்கினால் தோஷம் தீரும்.

    ரிஷப ராசிக்காரர்கள் கழுத்து பகுதியை பார்த்து கும்பிட வேண்டும்.

    மிதுன ராசிக்காரர்கள் தோல், புஜம் இவற்றை பார்த்து வணங்கினால் தோஷம் நீங்கும்.

    கடக ராசியினர் மார்பு பகுதியை வணங்க தோஷம் குறையும்.

    சிம்ம ராசிக்காரர்கள் வயிறு பகுதியை வணங்க வேண்டும்.

    கன்னி ராசியினர் பைரவ பெருமானின் குறியை வணங்க வேண்டும்.

    துலாம் ராசிக்காரர்கள் தலை பகுதியை பார்த்து வணங்க வேண்டும்.

    விருச்சிக ராசிக்காரர்கள் முட்டி பகுதியை பார்த்து வணங்க வேண்டும்.

    தனுசு, மகர ராசிக்காரர்கள் முட்டியின் கீழ்ப்பகுதியை பார்த்து வணங்க வேண்டும்.

    கும்ப ராசியினர் கணுக்காலை வணங்க வேண்டும்.

    மீன ராசிக்காரர்கள் பாதத்தை பார்த்து வணங்க வேண்டும்.

    • செந்நிற மலர்கள் சாத்தி வழிபடலாம்.
    • ஆலயங்களில், பைரவருக்கு வடைமாலை சாத்தியும் வேண்டிக்கொள்வார்கள்.

    தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவ வழிபாடு செய்யலாம்.

    செந்நிற மலர்கள் சாத்தி வழிபடலாம். ஆலயங்களில், பைரவருக்கு வடைமாலை சாத்தியும் வேண்டிக்கொள்வார்கள்.

    மிளகால் செய்யப்பட்ட உணவை நைவேத்தியமாகப் படைப்பார்கள்.

    வீட்டில் இருந்தே பைரவரை வழிபடலாம். பைரவாஷ்டகம் சொல்லி, பைரவ போற்றி சொல்லியும் பைரவரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து பூஜிக்கலாம்.

    அஷ்டமி நாளில், ராகுகால வேளையில், வீட்டு பூஜையறையில், விளக்கேற்றி, பைரவ அஷ்டகம் சொல்லி பாராயணம் செய்வது, இதுவரை இருந்த காரியத் தடைகள் அனைத்தும் நீக்கிவிடும்.

    தடையின்றி காரியங்கள் நிகழும்.

    வீட்டின் தரித்திரத்தைப் போக்கி அருளுவார் பைரவர்.

    அஷ்டமி நாளில், பைரவரை நினைத்துக்கொண்டு, தெருநாய்களுக்கு உணவளிப்பதும் தோஷங்களில் இருந்தும் சாபங்களில் இருந்தும் விலக்கு அளிக்கும். விமோசனம் பிறக்கும் என்பது ஐதீகம்.

    செவ்வாய்க்கிழமை ராகுகாலவேளையில் (மாலை 3 முதல் 4.30 மணிக்குள்) விளக்கேற்றுங்கள்.

    பயமில்லாத வாழ்க்கையைத் தந்தருள்வார் பைரவர்.

    எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கி, காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார்.

    • தீய சக்தியை அழித்து நன்மைகளைத் தந்தருள்வார் பைரவர் என்பது ஐதீகம்.
    • பைரவரை எவரொருவர் தொடர்ந்து வழிபடுகிறார்களோ அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது.

    பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி.

    அஷ்டமி நாளில், எந்தக் காரியம் செய்யாவிட்டாலும் பைரவரை வழிபடுவது மிகவும் பலத்தைக் கொடுக்கும்.

    தீய சக்தியை அழித்து நன்மைகளைத் தந்தருள்வார் பைரவர் என்பது ஐதீகம்.

    ஒவ்வொரு தேய்பிறை அஷ்ட மியிலும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் ஆலயங்களில் நடைபெறும்.

    அதே போல், அஷ்டமி நாளில், சில ஆலயங்களில், ராகுகாலத்தில் பைரவருக்கு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் செய்யப்படுவது வழக்கம்.

    பொதுவாகவே ராகுகால வேளையில் விளக்கேற்றி துர்கை பூஜை செய்வது மகத்துவமானது என்பார்கள்.

    அப்போது துர்காதேவியை நினைத்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அஷ்டமியன்று, துர்கா தேவியுடன் அஷ்டமிக்கு உரியவரான பைரவரை மனதார வழிபட்டால், மகத்தான பலன்கள் நிச்சயம்.

    கலியுகத்துக்கு கால பைரவர் என்றொரு சொல் உண்டு. கால பைரவரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், வீட்டில் உள்ள தீயசக்திகள் அனைத்தும் தெறித்து ஓடிவிடும்.

    கண்ணுக்குத் தெரிகிற, கண்ணுக்கே தெரியாத எதிரிகள் எல்லோரும் வீரியம் இழந்து போவார்கள்.

    பைரவரை எவரொருவர் தொடர்ந்து வழிபடுகிறார்களோ... அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது.

    • அன்று முதல் கால பைரவரை தன்குல தெய்வ மாகவே வணங்கி வந்தார்.
    • இக்கோவிலில் வீற்றிருக்கும் கால பைரவர் சிலை வடிவமைப்பு சிறப்பு வாய்ந்தது.

    இத்தகைய சிறப்புகள் பெற்ற கால பைரவரை அதியமான் மன்னன் வழிபட்டு மனசங்கடங்கள் நீங்கப்பெற்று அவர் சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றார்.

    அன்று முதல் கால பைரவரை தன்குல தெய்வ மாகவே வணங்கி வந்தார்.

    மேலும் தன் கோட்டை சாவி, கஜானா சாவி என அனைத்தும் கால பைரவரிடம் வழங்கி பாதுகாத்து வந்தார்.

    அதுமட்டுமின்றி அதியமான், தனது வீரவாளை தினமும் கால பைரவரின் பாதங்களில் வைத்து காலையும், மாலையும் பூஜைகள் செய்து எடுத்து சென்றார்.

    அதனால் தான் அவரது நினைவாக இன்றும் கூட இக்கோவிலில் கால பைரவரின் திருக்கரங்களில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் வீற்றிருக்கும் கால பைரவர் சிலை வடிவமைப்பு சிறப்பு வாய்ந்தது.

    அவரின் தலையிலே அக்னி பிழம்பை தாங்கி, காதுகளில் குண்டலத்துடனும் கழுத்தினில் கபால மாலையுடனும் பூணூல் அணிந்தும் அரைஞான் கயிறாக பாம்மை முடிந்தும் கால்களிலேயே சலங்கினை கொண்டும் காட்சியளிக்கிறார்.

    மேலும் தனது நான்கு கரங்களில் வலது மேல்கரத்தில் உடுக்கையுடன் கீழ்கரத்தில் திரிசூலத்துடனும் இடதுமேல் கரத்தில் பாசங்குசமும், கீழ் கரத்தில் கபாலத்துடனும் ஏந்தியுள்ளார்.

    மேலும் பத்மா பீடம் என்று சொல்லக்கூடிய பீடத்தில் அசுரசோன வாகன என்று சொல்லக்கூடிய நாய் வாகனத்தில் நின்ற கோலத்துடன் நிர்வாணமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    • ஆகம விதிமுறைப்படி காசியில் மட்டுமே கால பைரவர் தனிக்கோவில் அமைந்துள்ளது.
    • அங்கு தவிர வேறெங்கும் கால பைரவர் கோவில் கட்டுவது ஆகம விதிக்கு புறம்பானது.

    கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் ஆஞ்சி மன்னன் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள், சங்கடங்கள் தீர்க்க வேண்டி அவரின் அரச வையில் இருந்த ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டார்.

    அப்போது ஜோதிடர்கள் , மன் னன் அதியமானிடம், "உங்கள் மனசங்கடங்கள் தீர்ந்து நிம்மதியும், வெற்றியும் பெற வேண்டுமானால் கால பைரவருக்கு தனிக்கோவில் கட்ட வேண்டும்.

    ஆனால் ஆகம விதிமுறைப்படி காசியில் மட்டுமே கால பைரவர் தனிக்கோவில் அமைந்துள்ளது.

    அங்கு தவிர வேறெங்கும் கால பைரவர் கோவில் கட்டுவது ஆகம விதிக்கு புறம்பானது.

    எனவே காலபைரவர் அவதரித்த காசிக்கு சென்று கால பைரவர் கோவிலில் திருகங்கை பூஜை செய்து காசி கால பைரவருக்கு சிறப்பு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்.

    கங்கை நதியில் இருந்து கல்லெடுத்து கால பைரவரின் கோவிலுக்கு சிலை வடிவமைத்து அதற்கான பூஜைகளை செய்து அங்கிருந்து அதியமான்கோட்டைக்கு கொண்டு வந்து கோவில் கட்ட வேண்டும்.

    மேலும் கோவில் மகா மண்டபத்தில் ஒன்பது நவக்கோள்களின் சக்கரத்தையும் மகா மண்டப மேல்கூரையில் அமைத்து வழிபாடு செய்ய வேண்டும்"என்று தெரிவித்தனர்.

    இதன்படி மன்னர் அதியமான், தனது படைகளுடன் காசிக்கு சென்று காசி காலபைரவரின் அருளுடன் சிலையை வடிவமைத்து பூஜைகள் செய்து அதியமான்கோட்டையில் மயானத்தில் கால பைரவரை எழுந்தருள செய்தார்.

    • சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன வரலாற்று சின்னமாகவும், பரிகார தலமாக விளங்குகிறது.
    • இந்த கால சக்கரத்தை இயக்கும் பரம் பொருளே காலபைரவர்.

    தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் அதிய மான்கோட்டையில் கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடு மான் ஆஞ்சி மன்னனால் கட்டப்பட்ட ஸ்ரீதட்சிணகாசி கால பைரவர் கோவில் கட்டப்பட்டதாகும்.

    காசிக்கு அடுத்தப்படியாக கால பைரவருக்கு என்று இந்தியாவிலேயே 2வது திருத்தலமாக இக்கோவில் அமைந்துள்ளது.

    சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன வரலாற்று சின்னமாகவும், பரிகார தலமாக விளங்குகிறது.

    எமனும் நடுங்கும் தோற்றம்

    சிவபெருமானின் அவதாரமாக விளங்கக் கூடியவர் கால பைரவர்.

    தனிக்கோவிலாகிய விளங்கக்கூடிய காலனாகிய எமனும் நடுங்கும் தோற்றம் உடையவர்.

    உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் வான் மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரம் அனைத்தும் கால பைரவரின் ஆளுகைக்கு உட்பட்டதாகும்.

    இந்த கால சக்கரத்தை இயக்கும் பரம் பொருளே காலபைரவர்.

    எனவே வழிபட்டால் சகல தோஷங்களும் பிரச்சினைகளும் மன சங்கடங்களும் நீங்கப் பெறும் ஒரே கோவில் ஆகும்.

    எல்லாவிதமான வழிபாட்டுக்கும் கைமேல் பலன் கிடைக்கும்.

    ×