search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலபைரவர்"

    • ஓம் அகந்தையழிப்பவனே போற்றி!
    • ஓம் ஆனந்த பைரவனே போற்றி!

    ஓம் பைரவனே போற்றி!

    ஓம் பயநாசகனே போற்றி!

    ஓம் அஷ்டரூபனே போற்றி!

    ஓம் அஷ்டமி தோன்றலே போற்றி!

    ஓம் அயன்குருவே போற்றி!

    ஓம் அறக்காவலனே போற்றி!

    ஓம் அகந்தையழிப்பவனே போற்றி!

    ஓம் அடங்காரின் அழிவே போற்றி!

    ஓம் அற்புதனே போற்றி!

    ஓம் அசிதாங்க பைரவனே போற்றி!

    ஓம் ஆனந்த பைரவனே போற்றி!

    ஓம் ஆலயக்காவலனே போற்றி!

    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி!

    ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி!

    ஓம் உக்ர பைரவனே போற்றி!

    ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி!

    ஓம் உதிரம் குடித்தவனே போற்றி!

    ஓம் உன்மத்த பைரவனே போற்றி!

    ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி!

    ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி!

    ஓம் எல்லை தேவனே போற்றி!

    ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி!

    ஓம் கபாலதாரியே போற்றி!

    ஓம் கங்காளமூர்த்தியே போற்றி!

    ஓம் கர்வ பங்கனே போற்றி!

    ஓம் கல்பாந்த பைரவனே போற்றி!

    ஓம் கதாயுதனே போற்றி!

    ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி!

    ஓம் கருமேக நிறனே போற்றி!

    ஓம் கட்வாங்க தாரியே போற்றி!

    ஓம் களவைக் குலைப்போனே போற்றி!

    ஓம் கருணாமூர்த்தியே போற்றி!

    .ஓம் கால பைரவனே போற்றி!

    ஓம் காபாலிகர் தேவனே போற்றி!

    ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி!

    ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி!

    ஓம் காசிநாதனே போற்றி!

    ஓம் காவல்தெய்வமே போற்றி!

    ஓம் கிரோத பைரவனே போற்றி!

    ஓம் கொன்றைப்பிரியனே போற்றி!

    ஓம் சண்ட பைரவனே போற்றி!

    ஓம் சட்டை நாதனே போற்றி!

    ஓம் சம்ஹார பைரவனே போற்றி!

    ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி!

    ஓம் சிவத்தோன்றலே போற்றி!

    ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி!

    ஓம் சிக்ஷகனே போற்றி!

    ஓம் சீர்காழித்தேவனே போற்றி!

    ஓம் சுடர்ச்சடையனே போற்றி!

    ஓம் சுதந்திர பைரவனே போற்றி!

    ஓம் சிவ அம்சனே போற்றி!

    ஓம் சுவேச்சா பைரவனே போற்றி!

    ஓம் சூலதாரியே போற்றி!

    ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி!

    ஓம் செம்மேனியனே போற்றி!

    ஓம் «க்ஷத்ரபாலனே போற்றி!

    ஓம் தட்சனை அழித்தவனே போற்றி!

    ஓம் தலங்களின் காவலனே போற்றி!

    ஓம் தீது அழிப்பவனே போற்றி!

    ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி!

    ஓம் தெற்கு நோக்கனே போற்றி!

    ஓம் தைரியமளிப்பவனே போற்றி!

    ஓம் நவரச ரூபனே போற்றி!

    ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி!

    ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி!

    ஓம் நரகம் நீக்குபவனே போற்றி!

    ஓம் நாய் வாகனனே போற்றி!

    ஓம் நாடியருள்வோனே போற்றி!

    ஓம் நிமலனே போற்றி!

    ஓம் நிர்வாணனே போற்றி!

    ஓம் நிறைவளிப்பவனே போற்றி!

    ஓம் நின்றருள்வோனே போற்றி!

    ஓம் பயங்கர ஆயுதம் போற்றி!

    ஓம் பகையளிப்பவனே போற்றி!

    ஓம் பரசு ஏந்தியவனே போற்றி!

    ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி!

    ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி!

    ஓம் பால பைரவனே போற்றி!

    ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி!

    ஓம் பிரளயகாலனே போற்றி!

    ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி!

    ஓம் பூஷண பைரவனே போற்றி

    ஓம் பூதங்களின் நாதனே போற்றி!

    ஓம் பெரியவனே போற்றி!

    ஓம் பைராகியர் நாதனே போற்றி!

    ஓம் மல நாசகனே போற்றி!

    ஓம் மகோதரனே போற்றி!

    ஓம் மகா பைரவனே போற்றி!

    ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி!

    ஓம் மகா குண்டலனே போற்றி!

    ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி!

    ஓம் முக்கண்ணனே போற்றி!

    ஓம் முக்தியருள்வோனே போற்றி!

    ஓம் முனீஸ்வரனே போற்றி!

    ஓம் மூலமூர்த்தியே போற்றி!

    .ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி!

    ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி!

    ஓம் ருத்ரனே போற்றி!

    ஓம் ருத்ராட்சதாரியே போற்றி!

    ஓம் வடுக பைரவனே போற்றி!

    ஓம் வடுகூர் நாதனே போற்றி!

    ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி!

    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி!

    ஓம் வாரணாசி வேந்தே போற்றி!

    ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி!

    ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி!

    ஓம் விபீஷண பைரவனே போற்றி!

    ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

    • சுண்டல், வடை,பாயசம், சர்க்கரைப் பொங்கல், மது, மாமிசம் நிவேதனம் செய்ய வேண்டும்.
    • இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கை கூடும்.

    பால்,இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாய் மான் தோலில் அமர்ந்து தினம் 1008 வீதம் உரு ஜெபித்து பூஜிக்க வேண்டும்.

    சுண்டல், வடை,பாயசம், சர்க்கரைப் பொங்கல், மது, மாமிசம் நிவேதனம் செய்ய வேண்டும்.

    ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். அகந்தை பொய், அக்கிரம அநியாயக்காரர்களை அழித்து நீதியை நிலைநாட்டும் குறிக்கோளோடு வடிவம் எடுத்தவர்.

    செய்வினை, சூனிய கோளாறுகள், பேய், பிசாசு, முனி, காட்டேரி போன்ற பாதிப்பிலிருந்து நீங்க யந்திரத்தை 108 உரு ஜெய பூஜை செய்து கையில் தாயத்தாக அணிந்து கொள்ளலாம்.

    இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கை கூடும்.

    • கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.
    • மரண பயத்தை போக்குபவர். எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர்.

    முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறதியான பூஜையும் ஸ்ரீபைரவருக்கே உரியது.

    பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.

    கோவிலில் இருக்கும் குருக்கள் மூலமாகத்தான் புஷ்பம் முதலியவை சாற்றுதல் வேண்டும்.

    சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீபைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும்.

    ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீபைரவரை வழிபட உகந்த நாட்கள்தான்.

    ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீபைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

    பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்து உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

    மரண பயத்தை போக்குபவர். எம பயத்திலிருந்து பக்தர்களை காப்பவர் கால பைரவர்.

    தமிழ்நாட்டில் சீர்காழி அருள்மிகு சட்டைநாதர் கோவில், உஜ்ஜயினி, தக்கோலம், காட்மாண்டு, திருமீயச்சூர், வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் சுயம்புபைரவர் ஆகிய தலங்களில் காலபைரவர் வழிபாடு சிறப்பாக நடக்கிறது.

    • சிம்ம ராசியினர் ஞாயிறுக் கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும்.
    • சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார்.

    ஞாயிறுக்கிழமை

    சிம்ம ராசியினர் ஞாயிறுக் கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும்.

    இந்த கிழமையில் சிம்ம ராசி ஆண், பெண்கள் பைரவருக்கு ராகு காலத்தில் அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி விரைவில் நடை பெறும்.

    திங்கட்கிழமை

    கடக ராசியினர் திங்கட் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியா வட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

    செவ்வாய்க்கிழமை

    மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும்.

    மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருள் திரும்ப பெறலாம்.

    புதன்கிழமை

    மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம்.

    நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பூமி லாபம் கிடைக்கும்.

    வியாழக்கிழமை

    தனுசு, மீன ராசியினர் பைரவரை வியாழக் கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

    குறிப்பாக வியாழக் கிழமையில் விளக் கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதீகம்.

    வெள்ளிக் கிழமை

    ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம்.

    வெள்ளிக் கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சஸ்கரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.

    சனிக்கிழமை

    மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை தரும்.

    சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார்.

    இதனால் அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.

    மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபாட்டால் காலத் தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி, நல்லவை வந்து சேரும்.

    • பைரவர் சிவனின் 64 திரு உருவத்தில் ஒருவர் ஆவார்.
    • பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

    சிவனின் அம்சமான கால பைரவர், எந்தெந்த நாளில், எந்த ராசியினர் வழிபடுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.

    பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார்.

    சொர்னாகர் சன பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப் படுகின்றார்.

    பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.

    அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார், என்பதால் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.

    பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

    அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.

    பைரவ விரதம் தொடர்ச் சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    இத்தனை சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள், அதற்குரிய கிழமைகளில், வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.

    • என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்;
    • கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும்.

    பைரவ லட்சார்ச்சனை, ஸ்ரீ ருத்ர யாகம், ஸ்ரீ பைரவ ஹோமம் போன்றவற்றில் கலந்துகொள்வது மிகவும் விசேஷம்.

    எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்

    "ஓம் கால காலாய வித்மஹே

    கால தீத்தாய தீமஹீ

    தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"

    என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்;

    கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும்.

    எனவே, காலபைரவாஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபட்டால், எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சினை கள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்.

    • நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.
    • மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர்.

    காலபைரவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சவுபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    ராகு கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர்.

    நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர்.

    12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால் இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம்.

    21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம்.

    காலத்தின் கடவுளான கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்.

    எனவே துன்பப்படும் எல்லா மக்களும் கால பைரவாஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா வளங்களும் பெறலாம்.

    தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய்களை ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம்.

    நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் சில ஆலயங்களில் சிறப்பாக ஏற்றப்படுகிறது.

    பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாத்துவதும் உண்டு.

    • எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு பைரவர் என்று பெயர்.
    • கால பைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்குவதுடன், எதிரிகளின் பயமும் விலகும்.

    எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு பைரவர் என்று பெயர்.

    படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் "பைரவர்" என்று அழைக்கப்படுகிறார்.

    பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது.

    படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.

    பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சி அளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன.

    அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது.

    இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.

    சனீஸ்வரர் பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார்.

    ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்.

    காசியே பைரவரின் பிரதான தலமாகும்.

    சிவபெருமானின் தலைமைக் காவலரான பைரவரின் தலைமையிடம் காசியில் விசுவநாதர் ஆலயத்தின் வடக்கில் உள்ள பைரவநாத் என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீகால பைரவர் சன்னதியாகும்.

    பிரம்மாவும் திருமாலும் திருவண்ணாமலையில் அடிமுடி தேடியதில் பிரம்மன் பொய்யுரைத்தபடியால் கோபம் கொண்ட சிவனது புருவத்திலிருந்து தோன்றியவரே இந்த ஸ்ரீகால பைரவர்.

    கார்த்திகை மாதத் தேய்பிறை அஷ்டமியில் இந்தக் காலபைரவர் அவதாரம் செய்ததால் அந்நாளில் மக்கள் விரதம் இருந்து காலாஷ்டமியாகக் கொண்டாடுகிறார்கள்.

    கால பைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்குவதுடன், எதிரிகளின் பயமும் விலகும்.

    இவருடைய சன்னதியில் மிருத்யுஞ்ச மந்திரத்தை ஓதுபவர்களையும் கேட்பவர்களையும் கண்டு யமன் அஞ்சி நிற்பானாம்.

    அச்சரப் பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் கால பைரவர் வித்தியாசமான கோலத்தில் காணப்படுகிறார்.

    மிகச்சிறிய உருவமாக இருந்தாலும் அவர் கழுத்தில் கபால மாலை அணிந்து காணப்படுகிறார்.

    அவரது காதில் கடுக்கன் அணிவிக்கப்பட்டு உள்ளது.

    இத்தகைய அலங்காரத்தில் தமிழகத்தில் வேறு எங்கும் கால பைரவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரை வழி பட்டால் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

    தொழில் தொடங்கும் முன்பும் இவரை வழிபட வேண்டும்.

    எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் இவரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    தேய்பிறை, அஷ்டமி தினத்தன்று இந்த கால பைரவரை வழிபடுவது மிகவும் நல்லது.

    பூசனிக்காய் தீபம் ஏற்றியும் இவரை வழிபடலாம்.

    • தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பைரவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு காலபைரவருக்கு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம், வடைமாலை சாற்றப்பட்டிருந்தது.

    பின்னர் பைரவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கும், நரிக்குடி எமனேஸ்வரர்கோவிலில் உள்ள பைரவருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது

    • சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சம்பழம் வைத்து 100 ரூபாய்க்கு விளக்கு தட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
    • வாழை இலை வைத்து மறைத்து அதன் மீது சாம்பல் பூசணி தேங்காய் உள்ளிட்டவை வைத்து மீண்டும் விற்பனை செய்கின்றனர்.

     தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் ஆலயம் உள்ளது. தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை தினங்களில் தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலமான பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் இருந்தும் ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    நேற்று தேய்பிறை அஷ்டமி என்பதால் ஏரா ளமான பக்தர்கள் கால பைரவர் ஆலயத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிலர் தங்கள் வேண்டுதலை சாம்பல் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதற்காக கோவிலுக்கு முன்புறமாக பாக்கு மட்டை யில் சாம்பல் பூசணி, தேங்காய், எலுமிச்சம்பழம் வைத்து 100 ரூபாய்க்கு விளக்கு தட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதனை பக்தர்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

    பக்தர்கள் பயன்படுத்திய பாக்குமட்டை தட்டை சில கடை உரிமையாளர்கள் மீண்டும் எடுத்து வந்து தட்டு தீ பட்ட இடங்கள் மற்றும் சாணம் வைத்த இடத்தில் வாழை இலை வைத்து மறைத்து அதன் மீது சாம்பல் பூசணி தேங்காய் உள்ளிட்டவை வைத்து மீண்டும் விற்பனை செய்கின்றனர். ஏற்கனவே ஒருவர் வைத்து வழிபட்ட தட்டை இவர்கள் எடுத்து வந்து மீண்டும் விற்பனை செய் வது பக்தர்களிடம் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே கடை உரிமை யாளா்கள் மஞ்சளுக்கு பதிலாக ஜிலேபி பவுடரை பயன்படுத்தி பக்தர்களுக்கு விளக்கு தட்டு விற்பனை செய்து வந்ததை மாலைமலர் நாளி ழதலில் வெளியா னதையடுத்து தற்பொழுது மஞ்சள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே, மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர்.

    இதே போல பல்லடம் பொன்காளியம்மமன் கோவில், பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் காலபைரவர் கோவில், சித்தம்பலம் நவகிரகக்கோட்டை சிவன்கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.

    • மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர். 

    ×