என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பரிசு தொகுப்பு"

    • ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன்களை விநியோகித்தனர்.
    • நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு சுழற்சி முறையில் வழங்கப்படும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2023-ம் ஆண்டு தைப் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1000 (ரூபாய் ஆயிரம்) ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பண விநியோகப் பணியினை 9.1.2023- ந் தேதி அன்று தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. அன்றைய தினமே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.

    மேலும், திருப்பூர் மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள 7.96 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 310 குடும்பங்களுக்கும், விடுதலின்றி சுழற்சி முறையில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

    நியாய விலைக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அந்தந்த நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு சுழற்சி முறையில் வழங்கப்படும் விபரம், கிராமம் ,தெருவின் பெயர் மற்றும் நாள் ஆகிய விபரங்கள் குறித்த டோக்கன்கள் 3.1.2023 முதல் 8.1.2023 வரை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளின் விற்பனையாளர் மூலம் வழங்கப்படும்.

    அவ்விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் அறிவிப்பு பலகை மூலம் அறிவிப்பாக தெரிவிக்கப்படும். பொங்கல் பரிசு நியாய விலைக்கடை விற்பனை முனைய எந்திரத்தின் (POS) பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். அதன்படி, குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வேண்டுமானாலும், தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    அனைத்து நியாய விலைக்கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம் எனவும், பொங்கல் பரிசுப் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் : 1967 மற்றும் 1800 425 5901, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 0421-2971116, மாவட்டவழங்கள் அலுவலர் : 94450 00407, 73387 20335,துணைப்பதிவாளர், (பொதுவிநியோகத்திட்டம்) :தனிவட்டாட்சியர், திருப்பூர் வடக்கு : 94450 00257, தனிவட்டாட்சியர், உடுமலைப்பேட்டை : 94450 00254, வட்டவழங்கல் அலுவலர், அவினாசி : 94450 00255, 00255, வட்டவழங்கல் அலுவலர், பல்லடம் : 94450 00256, வட்டவழங்கல் அலுவலர், திருப்பூர் தெற்கு : 94457 96462, வட்டவழங்கல் அலுவலர், மடத்துக்குளம் : 9445796409, வட்டவழங்கல் அலுவலர், தாராபுரம் : 94450 00244, வட்டவழங்கல் அலுவலர், காங்கயம் : 94450 00243, வட்டவழங்கல் அலுவலர், ஊத்துக்குளி : 94457 96463 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் பணி இன்று தொடங்கியது. ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன்களை விநியோகித்தனர்.

    • வீடு, வீடாக ரேஷன் ஊழியர்கள் வழங்கினர்.
    • 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ளனர்.

    கோவை:

    பொங்கல் தொகுப்பு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

    வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.அன்றே அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ளனர். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

    ரேஷன் ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று டோக்கன் வினியோகம் செய்தனர். வருகிற 8-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.

    இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ளது. அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 88 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1089 பேர் இலங்கை தமிழர்கள். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படு கிறது.

    ஒரு கடையில் ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளோம். டோக்கன் வழங்கியதும் வருகிற 9-ந்தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை வருகிற 9-ந் தேதி தொடங்கிவைக்கிறார்.
    • இலங்கை மறுவாழ்வு தமிழர்கள் 19 ஆயிரத்து 269 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், முழுகரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு மேற்கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வினியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை வருகிற 9-ந் தேதி தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலான 4 நாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைகளில் எவ்வளவு ரேஷன் கார்டுகள் இருக்கிறது என்பதை பொறுத்து, ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு வழங்கலாம் என்பது முடிவு செய்யப்படும்.

    பொங்கல் பரிசு தொகுப்பை 12-ந் தேதிக்குள் பெற முடியாதவர்கள் மற்றும் வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13-ந் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இலங்கை மறுவாழ்வு தமிழர்கள் 19 ஆயிரத்து 269 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

    பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்கள் மற்றும் மாதந்தோறும் வழங்கப்படும் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் 60 சதவீதம் அளவிற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளது. இன்னும் 2, 3 தினங்களில் 100 சதவீத பொருட்களும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்றடைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் பொங்கலுக்கு கரும்பு வினியோகம் செய்ய வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்த பன்னீர் கரும்புக்கு விலை கிடைக்காது. எனவே அதனை அரசாங்கம் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை பரிசீலனை செய்து, 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ் தமிழர்கள் 19 ஆயிரத்து 269 பேருக்கும் கரும்பு வழங்குவதற்கும் உத்தரவு வழங்கப்பட்டு அது செயல்படுத்தப்பட உள்ளது.

    தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. அந்த 17 மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. ஒரு கரும்புக்கு ரூ.33 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கரும்பை இடைத்தரகர்கள் இன்றி கலெக்டர் தலைமையிலான குழுக்களே நேரடியாக கொள்முதல் செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் வே.ராஜாராமன், தமிழ்நாடு வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் சு.பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு
    • பொது மக்களுக்கு ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    பொங்கல் பண்டிகையை யொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இதையடுத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்தை பொருத்த மட்டில் 764 ரேசன் கடைகள் மூலமாக 5 லட்சத்து 74 ஆயிரத்து 764 ரேசன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் ரேசன் கார்டு தாரர்களுக்கு டோக்கன் வழங்கி உள்ளனர். தினமும் காலை 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க டோக்கன் வழங்கப் பட்டுள்ளது. நாளை 9-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

    இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுதொகுப்பு பொது மக்களுக்கு வழங்கப் படுகிறது. இதற்கு தேவையான பொருட்கள் அந்தந்த ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைக்கப் பட்டு வருகிறது.

    ஏற்கனவே அரிசி சீனி வகைகள் முழுமையாக அனைத்து ரேசன் கடை களுக்கும் அனுப்பி வைக்கப் பட்ட நிலையில் கரும்பு அனுப்பும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

    நாளை ரேஷன் கடை ஊழியர்களிடம் பொது மக்களுக்கு வழங்க உள்ள ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ரேஷன் கடை மூலமாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

    கூட்டத்தினை கட்டுப்ப டுத்தும் வகையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனின் அடிப்படையில் அந்தந்த ரேஷன் கடை களுக்கு சென்று பொங்கல் தொகுப்புகளை பெற்று செல்லுமாறு அதிகா ரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய போது பொருட்களை துணிப்பையில் போட்டு அரசு வழங்கியது.

    பல்லடம்:

    பல்லடம் தாலுகாவில் 80,420 பேருக்கு பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு சார்பில் ரேசன் கார்டுதாரர்களுக்கு ரொக்கம் ரூ.ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ வெல்லம்,ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை உணவு பொருள் வழங்கல் துறையினர் செய்து வருகிறார்கள்.

    பல்லடம் பகுதியில் உள்ள 134 ரேசன் கடைகளில்,80,420 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரேசன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி தொடங்கியது. அந்தந்த பகுதி ரேசன் கடைஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய போது பொருட்களை துணிப்பையில் போட்டு அரசு வழங்கியது. இந்த முறை துணிப்பை வழங்கப்படாது என்றும், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் துணிப்பை எடுத்து வந்து பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருநது நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாய தோட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு கரும்பு கொள்முதல் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்களில் அரிசி இருப்பு ஆகியவற்றை கலெக்டர் ஜெயசந்திரபான ரெட்டி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

    தமிழக முதல் -அமைச்சரின் ஆணைப்படி, தை பொங்கலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1094 நியாய விலைக்கடைகளில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 934 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பொருட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை (இன்று) நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. தரமான அரிசி, 6 அடிக்கும் குறையாத கரும்பு கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்காக கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் கொண்டு வட்டார கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. தரமான கரும்பு கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்திடும் நோக்கில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள தோட்டங்களில் இக்குழுவினர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, கரும்பு தரங்களை உறுதி செய்து வருகின்றனர்.

    மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடமிருநது நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சியில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாய தோட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம்.

    மேலும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்குவதற்காக 559 டன் அரிசி மற்றும் சர்க்கரை தயார் நிலையில் உள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் எவ்வித தொய்வு இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சுந்தரம், குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தலைமைச் செயலகத்துக்கு அருகே போர் நினைவுச்சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
    • ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் 20 பேருக்கு 6 அடி உயர கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    ஆனால், பொங்கல் பரிசுடன் முழு கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், கரும்பு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து, 6 அடி நீளம் கொண்ட முழு கரும்பும் பொங்கல் பரிசுடன் கூடுதலாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதற்காக தமிழக அரசு ரூ.2 ஆயிரத்து 429 கோடி நிதியை ஒதுக்கியது. மொத்தம் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் தடையில்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. கூட்ட நெரிசலை தவிர்க்க, தெரு வாரியாக வீடு, வீடாக சென்று டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன.

    இதற்கான வழிகாட்டுதல்கள், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

    அதாவது, தோகையுடன் கூடிய 6 அடி உயர கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றுடன் இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் வெளிப்படையாக பயனாளிகள் கையில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் இன்று தொடங்குவதால், தலைமைச் செயலகத்துக்கு அருகே போர் நினைவுச்சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் இந்த திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

    அந்த கடைக்கான ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் 20 பேருக்கு6 அடி உயர கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்ததையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கியது.

    • தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியுள்ளது.
    • 13ந் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்துள்ளது.அதன்படி பொங்கல் பரிசு விநியோகம் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,165 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 98 ஆயிரத்து 693 கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம், அனைத்து பயனாளிகளுக்கும் உரிய நேரத்தில் பரிசு தொகுப்பு சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. கடந்த 5ந் தேதி முதல் நேற்று வரை ரேஷன் பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிமுடித்துள்ளனர்.

    பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக, பச்சரிசி, சர்க்கரை ஆகியவை போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்பு, லாரிகளில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதற்காக வழங்குவதற்காக ரூ.79.87 கோடியை இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களாக கூட்டுறவு சங்கம் கையிருப்பு வைத்துள்ளது. தினசரி தேவைக்கு ஏற்ப ரேஷன் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரொக்கத்தை பெற்றுக்கொள்வர்.

    பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் குறிப்பிட்ட நேரத்தில் கார்டில் பெயர் இடம்பெற்றுள்ள உறுப்பினர் யாரேனும் ஒருவர், ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம் என அறிவிக்கப்பட்டது.அதன்படி திருப்பூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை இன்று முதல் பெற உள்ளனர். நாளொன்றுக்கு 200 முதல் அதிகபட்சம் 250 கார்டு தாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்க ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் 2வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதற்காக அதை ஈடு செய்யும்வகையில் இரண்டு ஞாயிற்றுக்கிழமை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாதம் வரும் 13ந் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பரிசு தொகுப்பு பெறுவதில் புகார் இருப்பின் தொடர்புகொள்வதற்காக 1967, 1800 425 5901 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0421 2971116 என்கிற எண்ணிலும், மாவட்ட வழங்கல் அலுவலரை 94450 00407, கூட்டுறவு துணை பதிவாளர் (பொதுவினியோக திட்டம்) 73387 20335 என்கிற எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இன்று காலை பொங்கல் பரிசு தொகுப்பு விநியோக பணியை மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

    • சென்னையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
    • அதியமா ன்கோட்டை நியாய விலை கடையில் கலெக்டர் சாந்தி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

    இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ரொக்கம் ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

    தொடர்ந்து இன்று சென்னையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதனை அடுத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1077 நியாய விலை கடைகளில் உள்ள 4,66, 594 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தருமபுரி அடுத்த அதியமா ன்கோட்டை நியாய விலை கடையில் கலெக்டர் சாந்தி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் நிகழ்வு 5 நாட்கள் நடைபெறும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் 5 நாட்களும் இந்த பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, நல்லம்பள்ளி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம், கூட்டுறவு பதிவாளர் ராமதாஸ், ஊராட்சி மன்றத்தலைவர் மாரியம்மாள் முனிராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது
    • முதல் அமைச்சர் அறிவுரைப்படி படி இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடையில் தர ப்படுகிறது

    ஈரோடு,

    பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வந்தனர். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து இன்று தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 1,183 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க ப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 65 ஆயிரத்து 845 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 474 ரேஷன் அரிசி அட்டைதாரர்களாக உள்ளனர்.

    சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி னார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு கொல்லம்பாளை யம் வண்டிக்காரன் பேட்டை பகுதியிலுள்ள சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்கன்வாடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்ட முதல்- அமைச்சர் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 6 அடி கரும்பு, ரூபாய் ஆயிரம் கார்டுதா ரர்களுக்கு வழங்க உத்தர விட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்திற்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 868 முழு நேர நியாய விலை கடைகளும் 319 பகுதிநேர கடைகள் உள்ளன. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 7.65 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன்கள் ஜனவரி 3 முதல் 8 வரை வழங்க ப்பட்டுள்ளது.

    பொங்கல் தொகுப்பி ற்காக தரமான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சர் அறிவுரைப்படி படி இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடையில் தர ப்படுகிறது. அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று பாது காப்பாக பரிசுத்தொகை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இதில் கணேசமூர்த்தி எம்.பி, மேயர் நகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்று வரு கின்றனர். பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி- சேலையும் வழங்கப்பட்டு வருகிறது.

    • சாயல்குடி, கடலாடி பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
    • சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குலாம் முகைதீன் தலைமை தாங்கினார்.



    சாயல்குடியில் பொங்கல் தொகுப்பினை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர், மேலக் கிடாரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சாயல்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குலாம் முகைதீன் தலைமை தாங்கினார்.மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி நீர் பாசன சங்கத் தலைவர் ராஜாராம், சாயல்குடி பேரூராட்சி துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், நகர் இளைஞரணி செய லாளர் விக்னேஷ் ராம், சாயல்குடி நகர துணை செயலாளர் சுப்பிரமணியன், பேரூராட்சி கவுன்சிலர் காமராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பினை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, ஊராட்சித் தலைவர்கள் மங்களசாமி கன்னியம்மாள், சண்முகவேல், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் இளங்கோவன், வகிதா சகுபர், மாவட்ட பிரதிநிதி அமீர்ஹம்சா, முன்னாள் ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், வார்டு செயலாளர் கென்னடி, கிளைச் செயலாளர் மாரியூர் ஜமால், காசி, காவா குளம் முருகேசன், மேலக் கிடாரம் பழனிச்சாமி, ஒப்பிலான் இப்ராகிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சாயல்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நரிப்பையூர், கன்னிராஜ புரம், செவல்பட்டி, எஸ். தரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்.

    இதில் ஊராட்சித் தலைவர்கள் செஞ்சடை நாதபுரம் லிங்கராஜ், காணி ஒக்கூர் தென்னரசி செல்ல பாண்டியன், ஏ.புனவாசல் ராஜேந்திரன், டி. கரிசல்குளம் அப்பனசாமி, எஸ். தரைக்குடி முனியசாமி, டி. வேப்பங்குளம் முருகன், எஸ்.வாகைக்குளம் ஜெயலட்சுமி வடமலை, முன்னாள் உச்சநத்தம் ஊராட்சி தலைவர் பால கிருஷ்ணன், சாயல்குடி தி.மு.க. ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கடலாடி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆப்பனூர், பொதிகுளம், கிடாத்திருக்கை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். கடலாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கடலாடி, புனவாசல், ஓரிவயல், கருங்குளம், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகளை கடலாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வழங்கினார்.

    • குரங்கணி ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன் தலைமை தாங்கி பரிசு தொகுப்பினை வழங்கினார்

    தென்திருப்பேரை:

    குரங்கணி ஊராட்சியில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பான கரும்பு, பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்க பணம் ரூ.1,000 ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் பயனாளிகள் வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கி சென்றனர்

    ×