search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 292978"

    • பிரீத்தி (வயது 19) பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • சுபாஷினி(வயது 20). இவர் பிபிஏ 3-ம் ஆண்டு தற்போது நெட்சென்டருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக் குப்பத்தை சேர்ந்தவர் குணசேகரன், இவரது மகள் பிரீத்தி (வயது 19). மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர், அன்று மாலை வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பிரீத்தியை போனில் தொடர்பு கொண்டனர் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் தோழி வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு போன் தொடர்பை துண்டித்து விட்டதாகவும், அவர் பயன்படுத்திய செல்போன் தொடர்ந்து சுட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் பிரீத்தியன் பெற்றோர் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் இவரது மகள் சுபாஷினி (20). இவர் உளுந்தூர்பேட்டை சாரதா குருகுலம் கல்லூரியில் பிபிஏ 3-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்தார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான பூண்டி வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். கடந்த 8-ந்தேதி காலை 11 மணிக்கு தனது வீட்டில் இருந்து கண்டரக்கோட்டை நெட்சென்டருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.


    • உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் அருகே தொட்டி பகுதியில் விவசாயி ஒருவரது கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது
    • இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கள்ளக்குறிச்சி:

     உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் அருகே தொட்டி பகுதியில் விவசாயி ஒருவரது கிணற்றில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் பாதுகாப்பு மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறந்த நிலையில் மிகுந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் ருத்ரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த சுப்ரமணி சேகர் (வயது 67) என்பவரை போலீசார் கைது செய்தனர்
    • அவரிடம் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


    திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் ருத்ரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த சுப்ரமணி சேகர் (வயது 67) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1000 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் திருக்கோவிலூர் பஸ் நிலையம் எதிரே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விட்டுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் லாலாதோப்பு தெருவை சேர்ந்த ராஜா (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர. அவரிடம் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிகண்டன் (வயது 28) இவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
    • எனது தாய் ராணி (48) மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் மணிகண்டன் (வயது 28) இவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற எனது தாய் ராணி (48) மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே எனது தாயை கண்டுபிடித்து தருமாறு மனுவில் கூறியுள்ளார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒன்றரைப் பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
    • வெள்ளி கொலுசு, 100 கிராம் வெள்ளி அரைஞான் கயிறு ரூ.15,000 ரொக்கம் ஆகியவைகளை திருடி சென்றுள்ளனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள காமகரம் என்ற ஊரை சேர்ந்தவர் சுப்ரமணி இவரது மகன் குமரவேல் (வயது 32). இவர் செஞ்சியில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திண்டிவனத்தில் பத்திரபதிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஆங்காங்கேயே தங்கி உள்ளதால் வீடு பூட்ட ப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒன்றரைப் பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

    இதே போல் அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் குமார் (39) என்பவர் தனது குடும்பத்துடன் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் பக்கத்து அறையில் இருந்த பீரோவை திறந்து பீரோவில் இருந்து 200 கிராம் வெள்ளி கொலுசு, 100 கிராம் வெள்ளி அரைஞான் கயிறு ரூ 15,000 ரொக்கம் ஆகியவைகளை திருடி சென்றுள்ளனர். வீட்டினுள் உரிமையாளர் உறங்கி கொண்டிருந்த போதே திருடர்கள் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து நல்லான் பிள்ளை பெற்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×