என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒடிடி"
- காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
- லவ்வர், கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த மணிகண்டன் பலரையும் கவர்ந்தார்.
இதன் பிறகு, அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் இளைஞர்கள் மனதில் நின்றது.
இந்நிலையில், லவ்வர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லவ்வர் திரைப்படம் மார்ச் மாதம் வரும் 27ம் தேதி முதல் டிஸ்னீப் பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சந்தாவின் கீழ் இலவசமாகவே பயன்படுத்த முடியும்.
- பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.
ஒ.டி.டி. சந்தாவுடன் கூடிய பிரீபெயிட் சலுகைகளை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில், சோனி லிவ் உடன் வி நிறுவனம் இணைந்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.
வி நிறுவனம் கூட்டணி அமைத்து இருப்பதன் மூலம் பயனர்கள் சோனிலிவ் மொபைல் சந்தாவின் கீழ் இவற்றை இலவசமாகவே பயன்படுத்த முடியும். இதே சேவைகளை ஒரு வருடத்திற்கு பெற விரும்புவோர் ரூ. 599 மற்றும் பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.
அந்த வகையில் இந்த பலன்களுக்கு தனியே செலவழிக்க விரும்பாதவர்கள் வி நிறுவனத்தின் ரூ. 698 சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். வி ரூ. 698 சலுகையில் 10 ஜி.பி. வரையிலான டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா பலன்களை பயன்படுத்துவதற்கு பயனர்கள் வேறு ஏதேனும் பிரீபெயிட் சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும்.
ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே இந்த சலுகையுடன் ஒரு வருடத்திற்கான சோனிலிவ் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் ஒ.டி.டி. சந்தா மட்டுமின்றி 28 நாட்களுக்கு 10 ஜி.பி. வரையிலான டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு நிகழ்ச்சிகளை அதிக தரத்தில் கண்டுகளிக்க முடியும்.
- அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
- இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
வி நிறுவனம் தனது பிரீபெயிட் சந்தாதாரர்களுக்கு முற்றிலும் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையில் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரிசார்ஜ் செய்வோர் எவ்வித கூடுதல் கட்டணம் மற்றும் சந்தா செலுத்தாமல் அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
ஒரு வருடத்திற்கான ஒ.டி.டி. பலன்கள் மட்டுமின்றி இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மற்ற முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இதே போன்ற வருடாந்திர பலன்களை கொண்ட சலுகையை வழங்கி வருகின்றன.
புதிய சலுகை குறித்து வி வலைதளத்தில் இடம்பெற்றுள்ள பதிவில், ரூ. 3 ஆயிரத்து 199 விலை கொண்ட ரிசார்ஜ் சலுகையில் மொத்தம் 730 ஜி.பி. டேட்டா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
இதுதவிர புதிய சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும் வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வார காலத்தில் பயன்படுத்தி முடிக்காத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
- பயனர்களுக்கு 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது.
- மூன்று பிரீபெயிட் சலுகைகளை ஜியோ அறிவித்தது.
ஜியோ நிறுவனம் புதிய ஜியோடிவி பிரீமியம் சந்தாவை இந்திய சந்தையில் அறிவித்து இருக்கிறது. இந்த ஒற்றை சலுகையில் பயனர்களுக்கு அதிகபட்சமாக 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் மூன்று பிரீபெயிட் சலுகைகளையும் ஜியோ அறிவித்து இருக்கிறது.
புதிய சலுகைகள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 398 என்று துவங்குகிறது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மட்டுமின்றி பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ், ஜீ5 மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகள் இன்று (டிசம்பர் 15) முதல் வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளுடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய சலுகைகளின் விலை ரூ. 398, ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். பலன்கள் மற்றும் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகின்றன.
ரூ. 398 சலுகையுடன் 12 ஒ.டி.டி. சந்தாக்களும், ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 சலுகைகளுடன் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகிறது. ஒரு வருட ரிசார்ஜ் சலுகையுடன் ஜியோ எளிய மாத தவணை முறை வசதியை வழங்குகிறது. மூன்று பிரீபெயிட் ரிசார்ஜ்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோடிவி பிரீமியம் சந்தா ஜியோ சிம் பயனர்களுக்கானது ஆகும். இத்துடன் ரூ. 148 விலையில் டேட்டா ஆட் ஆன் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. டேட்டா மற்றும் 12 ஒ.டி.டி. சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் விலை 28 நாட்கள் ஆகும். ஜியோடிவி பிரீமியம் சலுகைகள் நாளை (டிசம்பர் 16) முதல் வழங்கப்படுகிறது.
- நெட்ப்ளிக்ஸ் சேவையில் புதிதாக 60 லட்சம் பேர் இணைந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவிப்பு.
- இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தள பயன்பாடுகளில் புதிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்டு ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. புதிய அறிவிப்பு காரணமாக இந்திய பயனர்கள் இனி தங்களது அக்கவுன்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.
கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்டு ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் தான், நெட்ப்ளிக்ஸ் சேவையில் ஒரே அக்கவுன்ட்-ஐ பலர் பயன்படுத்துவதற்கான வசதி நீக்கப்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-ஐ அவர்களது வீடு, வெளியில் செல்லும் இடங்கள் மற்றும் பயணங்கள் என எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதோடு டிரான்ஸ்பர் ப்ரோபைல், மேனேஜ் அக்சஸ் மற்றும் டிவைசஸ் போன்ற புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும். நெட்ஃப்ளிக்ஸ்-இன் புதிய அறிவிப்பு மூலம், அந்நிறுவனம் IP முகவரி, டிவைஸ் ஐடி, அக்கவுன்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில், அக்கவுன்ட்-ஐ யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்கிறது.
புதிய மாற்றம் காரணமாக பயனர்கள், நெட்ப்ளிக்ஸ் ஹவுஸ்ஹோல்டு-ஐ செட்டப் செய்து கொள்ள வேண்டும். இந்த அக்கவுன்ட் பயனர் வீடு அல்லது வசிக்கும் இடமாக இருத்தல் அவசியம் ஆகும். ஒரே இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்துவோர் மட்டுமே இந்த அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த முடியும்.
மற்ற இணைப்பில் இருந்து நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-இல் லாக் இன் செய்தால், அவ்வாறு செய்வோருக்கு புதிய அக்கவுன்ட் உருவாக்குவதற்கான நோட்டிபிகேஷன் அனுப்பப்படுகிறது.
- ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட பெரியது.
- ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகை 200Mbps வேகத்தில், 3.3TB டேட்டா வழங்குகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் இந்திய சந்தையில் முன்னணி இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் திட்டத்தில் பயனற்கள் 40Mbps துவங்கி அதிகபட்சம் 1Gbps வரையிலான இணைய வேகத்தில் ஏராளமான சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.
பட்ஜெட் மற்றும் பயன்பாட்டிற்கான தேவைக்கு ஏற்ப பயனர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் வழங்கி வருகிறது. இதில் ஒடிடி பலன்களை வழங்கும் சலுகைகளும் அடங்கும். அந்த வகையில், ஏராளமான ஒடிடி பலன்களை கொண்ட பிராட்பேன்ட் இணைப்பு தேவைப்படும் பட்சத்தில் ஏர்டெல் சேவையை தேர்வு செய்து சிறப்பானதாக இருக்கும்.
ஏர்டெல் சேவை நாடு முழுக்க வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட அளவில் பெரியது ஆகும். இதன் காரணமாக பிராட்பேன்ட் இணைப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை விரைந்து சரி செய்து கொள்ள முடியும். ஒடிடி பலன்களை வழங்கும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ரூ. 999 சலுகை பலன்கள்:
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 999 சலுகையில் 200Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு மாதம் 3.3TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபிக்சட் லைன் காலிங் வசதி வழங்கப்படுகிறது. லேன்ட்லைன் சாதனத்தினை வாடிக்கையாளரே வாங்கிக் கொள்ளலாம்.
இவை தவிர இந்த சலுகையில்- அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர், விஐபி சர்வீஸ், அப்போலோ 24|7 சர்கில் சந்தா மற்றும் வின்க் பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- நெட்ஃப்ளிக்ஸ் உலகளவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஒடிடி தளமாக விளங்குகிறது.
- கொரோனா பெருந்தொற்று காரணமாக அமல்படுத்துவதை தாமதப்படுத்தி வந்த திட்டத்தை நெட்ஃப்ளிக்ஸ் அடுத்த ஆண்டு செயல்படுத்த இருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட் பாஸ்வேர்டை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. பாஸ்வேர்டு ஷேரிங் வியாபாரத்தை நிறுத்தும் முயற்சியில் நெட்ஃப்ளிக்ஸ் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் இதற்கு முடிவுகட்டும் இலக்கை நெட்ஃப்ளிக்ஸ் அடைய இருக்கிறது.
அடுத்த ஆண்டு துவக்கம் முதலே நெட்ஃப்ளிக்ஸ் அதன் பயனர்கள் பாஸ்வேர்டுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்க போவதில்லை. இது குறித்த தகவலை தி வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்டு இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் தங்களது குடும்பத்தார் தவிர வெளியில் உள்ள நண்பர்கள் மற்றும் வேற்று நபர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படாது. பாஸ்வேர்டு ஷேரிங்கை தடுத்து நிறுத்த பல்வேறு வழிகளை நெட்ஃப்ளிக்ஸ் கடந்த சில மாதங்களாக கண்டறிந்து வருகிறது.
நெட்ஃப்ளிக்ஸ் சந்தா முறை அறிவிக்கப்பட்டதில் இருந்தே பாஸ்வேர்டு ஷேரிங் பெரும் சிக்கலான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. எனினும், சந்தாதாரர்கள் குறைய துவங்கும் வரை இந்த பிரச்சினை குறித்து நெட்ஃப்ளிக்ஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை. இந்த ஆண்டு வருவாய் சரிய துவங்கியதில் இருந்து பாஸ்வேர்டு ஷேரிங்கிற்கு முடிவு கட்ட நெட்ஃப்ளிக்ஸ் தீவிரமாக செயல்பட துவங்கி இருக்கிறது.
சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், பாஸ்வேர்டு ஷேரிங்கை நிறுத்தவும் நெட்ஃப்ளிக்ஸ் பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்து வருகிறது. இதன் பகுதியாகவே நெட்ஃப்ளிக்ஸ்-இல் விளம்பரங்கள் அடங்கிய குறைந்த விலை சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மாதம் 6.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் நெட்ஃப்ளிக்ஸ் - மொபைல் ஒன்லி, பேசிக் பிலான், ஸ்டாண்டர்டு பிலான் மற்றும் பிரீமியம் பிலான் என நான்கு சந்தாக்களை வழங்கி வருகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 149, ரூ. 199, ரூ. 499 மற்றும் ரூ. 649 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்