search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏகாதசி விழா"

    • 2-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது
    • 11-ந் தேதி திருவாய் மொழித்திருநாள் சாற்றுமுறை உற்சவ பூர்த்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் பகல் பத்து, ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து உற்சவ விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழாக்கள் கோவிலில் மட்டுமே நடந்தது. 4 ரத வீதிகளில் சுவாமி திருவீதி உலா நடைபெற வில்லை.

    இதற்கிடையே 2 ஆண்டுகள் கழித்து இன்று முதல் அடுத்த மாதம் 11-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    இன்று பகல் பத்து உற்சவத்துடன்(திருமொழித் திருநாள் தொடக்கம்) வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து சுவாமி க்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.தொடர்ந்து 1-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் மோகினி அவதார நிகழ்ச்சியும் நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு 2-ந் தேதி(திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவு 10.30 மணிக்கு ராப்பத்து உற்சவம் ஆரம்பமாகிறது.

    9-ந் தேதி குதிரை வாகன உற்சவமும், 11-ந் தேதி திருவாய் மொழித்திருநாள் சாற்றுமுறை உற்சவ பூர்த்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 2 ஆண்டுகள் கழித்து விழா வெகுவிமரிசையாக நடக்க இருப்பதால் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    முன்னதாக அனைத்து சமுதாயத்தினர் முன்னி லையில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, காரமடை நகராட்சி தலை வர் உஷா வெங்கடேஷ், தசாப்ப பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.கோவிந்தன், கோவில் மிராசுதாரர் கே.ஆர்.கிருஷ்ணன், ஸ்தலத்தார்கள் சுதர்சன பட்டர், பாலாஜி, காரமடை நகர தி.மு.க செயலாளர் வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர், மின்வாரிய அதிகாரிகள், காரமடை நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விழாவின் போது கோவிலை சுற்றியுள்ள 4 ரத வீதிகளில் பந்தல் அமைப்பது. தெப்பக்குளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள குளியல் அறை, மொட்டை அடிக்கும் அறை, உடைமாற்றும் அறைகளை புதுப்பிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ×