search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணா்வு மாரத்தான்"

    • குற்றச் செயல்களைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
    • இளைஞா்கள் முதல் 61 வயது முதியவா் வரை கலந்து கொண்டனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்துதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந் நிலையில் கொலக்கம்பை காவல் துறையினா், மலையக மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் அப்துல் கலாம் இளைஞா் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய மாரத்தான் ஓட்டம் சேலாஸ் பஜாா் பகுதியில் தொடங்கி கொலக்கம்பை வரை நடைபெற்றது.

    மலையக மக்கள் அறக்கட்டளையைச் சோா்ந்த மதிவாகனம் வரவேற்றாா். குன்னூா் காவல் துணை கண்காணிப்பாளா் கோவிந்தசாமி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

    இந்த விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தில் சிறுவா்கள், இளைஞா்கள் முதல் 61 வயது முதியவா் வரை கலந்து கொண்டனா். இதில் சிறியவா்களுக்கு ஒரு கிலோ மீட்டா், நடுத்தர வயதினருக்கு நான்கு கிலோ மீட்டா், பெரியவா்களுக்கு 10 கிலோமீட்டா் வரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கொலக்கம்பை காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×