search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை புத்தகக் காட்சி"

    • சென்னை புத்தகக்காட்சி கடந்த 3-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது.
    • சில பதிப்பகங்கள் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தொகுப்பை 50 சதவீதம் தள்ளுபடிக்கு விற்பனை செய்தன.

    சென்னை:

    சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படும் புத்தகக்காட்சி மிகவும் புகழ் பெற்றது. இதை தமிழகத்தின் புத்தக திருவிழா என்று சொல்வார்கள்.

    சென்னை மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் இந்த காட்சிக்கு வந்து பயன் பெறுவது உண்டு.

    இந்த ஆண்டுக்கான சென்னை புத்தகக்காட்சி கடந்த 3-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது. தொடக்கத்திலேயே மழையால் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டன. புத்தகக்காட்சிக்கு ஒருநாள் விடுமுறை நிலை ஏற்பட்டது.

    அதன் பிறகு மழை இல்லாததால் தொடர்ந்து மிக சிறப்பாக புத்தகக்காட்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான வாசகர்கள் புத்தகக்காட்சிக்கு வந்து ஏராளமான புத்தகங்களை வாங்கி சென்றனர்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதுபோல இந்த ஆண்டும் புத்தகக் காட்சி சமயத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் புதிதாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

    வழக்கமாக நாவல்கள், கதைகள்தான் முன்பெல்லாம் அதிகமாக விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு கட்டுரை நூல்கள், சிறுவர் இலக்கிய புத்தகங்கள் அதிகளவு விற்பனையாகி உள்ளன.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு புத்தகக்காட்சி இரவு புத்தகக்காட்சி நிறைவு பெறுகிறது. அதன் பிறகுதான் எத்தனை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்பது தெரியவரும்.

    கடைசி நாள் என்பதால் பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை முடிந்தவரை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளன. பெரும்பாலான பதிப்பக உரிமையாளர்கள் கூடுதல் தள்ளுபடி விலைக்கு புத்தகங்களை இன்று விற்பனை செய்தனர்.

    நேற்று முதல் குறைந்த விலைக்கு அதிக புத்தகங்கள் கிடைத்ததால் வாசகர்கள், எழுத்தாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில பதிப்பகங்களில் நாவல்கள் 100 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆங்கில நாவல் விற்பனை செய்யப்படும் இடங்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

    நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு வெளியிலும் சாலையோரத்திலும் ஏராளமானவர்கள் பழைய புத்தகங்கள் விற்பனை செய்தனர். அந்த புத்தகங்களை வாங்கவும் வாசகர்கள் அதிகளவு ஆர்வம் காட்டினார்கள்.

    4 நாவல்கள் ரூ.250 என்று கடந்த வாரம் விற்பனையானது. இன்று 4 நாவல்கள் 100 ரூபாய்க்கும் கீழ் வழங்கப்பட்டது. சில பதிப்பகங்கள் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தொகுப்பை 50 சதவீதம் தள்ளுபடிக்கு விற்பனை செய்தன.

    நேற்றும் இன்றும் மாணவர்கள் வருகை அதிகளவு காணப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

    புத்தகக் காட்சி வளாகத்தில் உணவு கூடங்கள், இலக்கிய நிகழ்ச்சி அரங்குகள் இருந்தாலும் முதியவர்களுக்கு ஓய்வு எடுக்க சரியான வசதி செய்யப்படவில்லை. அரங்குகளுக்கு செல்லும்போது தள அமைப்பு பல இடங்களில் தடுமாற வைத்தது. அதுபோல கழிவறை பிரச்சனையும் காணப்பட்டது.

    இந்த குறைகளும் இல்லாமல் இருந்து இருந்தால் புத்தகக்காட்சி இனிய அனுபவமாக வாசகர்களுக்கு இருந்து இருக்கும்.

    • விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் புத்தகக் காட்சி நடைபெறும்.
    • புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி கடந்த 3-ந்தேதி தொடங்கியது. புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ள புத்தகக் காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும். புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை புத்தகக் காட்சிக்கு இன்று ஒருநாள் மட்டும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நாளை வழக்கம்போல் புத்தகக் காட்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    • முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறார்.
    • தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொண்டு சிறப்புறையாற்றுகிறார்.

    சென்னை:

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சி இன்று தொடங்க உள்ளது.

    புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி வைக்கிறார்.

    அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது மற்றும் பபாசி விருதுகளையும் வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறார்.

    தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்து கொண்டு சிறப்புறையாற்றுகிறார்.

    • விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் புத்தகக் காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்

    வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    • சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • ஜனவரி 3-ம் தேதி மாலை சென்னை புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47-வது சென்னை புத்தகக் காட்சியானது வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜனவரி 3-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    புத்தகக் காட்சியானது தினமும் வேலை நாளில் காலை 11 மணி முதலும், விடுமுறை நாளில் காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

    தமிழக அரசின் பாடநூல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றன.

    • புத்தகக்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
    • 3 நாட்கள் சர்வதேச புத்தகக்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது சென்னை புத்தகக்காட்சியானது வரும் ஜனவரி 6-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஜனவரி 6-ந் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை புத்தகக்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    விழாவில் 6 பேருக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளையும், தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும் முதலமைச்சர் வழங்க இருக்கிறார்.

    மேலும் தமிழக அரசின் ஆதரவுடன் ஜனவரி 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் அதே வளாகத்தில் சென்னை சர்வதேச புத்தகக்காட்சி நடைபெறுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். 


    புத்தகக்காட்சிக்கு 800 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச புத்தகக்காட்சிக்கு என 30 குளிரூட்டப்பட்ட அரங்குகள் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளன. இதுதவிர சிறிய அளவில் புத்தகங்களை வெளியிடும்

    பதிப்பாளர்களுக்காக மினி அரங்குகளும், திருநங்கை பதிப்பாளர்களுக்கு என சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டு உள்ளன. புத்தகக் காட்சியானது தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

    தமிழக அரசின் பாடநூல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றன.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று வருபவர்களும் பயன்பெறும் வகையில் ஜனவரி 22-ந் தேதி வரை புத்தக காட்சி நடத்தப்படுகிறது. நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×