என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுரை-நத்தம்"
- தமிழகத்திலேயே மிகவும் நீளமான மதுரை-நத்தம் பறக்கும் மேம்பாலம் ரூ.612 கோடி மதிப்பில் 7.5 கி.மீ.தூரம் கட்டப்பட்டுள்ளது.
- இதனை வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மதுரை-நத்தம் பறக்கும் மேம்பாலம்.
மதுரை
தமிழகத்தில் 2-வது பெரிய நகரமாக விளங்கும் மதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாலை, மேம்பாலம் அமைக்கும் பணிகள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. அதன்படி மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து நத்தம் வரை 35 கிலோ மீட்டருக்கு ரூ. 1028 கோடியில் மத்திய அரசின் "பாரத் மாலா" திட்டத்தின் மூலம் 4 வழிச் சாலையாக விரி வாக்கம் செய்யும் பணி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொட ங்கப்பட்டது.
இந்த சாலை யில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சி குளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலை வுக்கு பறக்கும் பாலம் கட்டப் ப ட்டு வருகி றது. ரூ. 612 கோடி யில் நவீன முறையில் இந்த பாலகட்டுமான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.
இந்த பாலத்தை தாங்கி பிடிக்கும் வகையில், பலமான அஸ்திவாரத்துடன் கூடிய 268 ராட்சத தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன. இது 150 அடிக்கு ஒன்று என்ற வீதத்தில் அமைக்கப் பட்டு உள்ளது. மேம்பால தூண்களுக்கு இடையே பாலத்தை இணைக்கும் வகையில் 'கான்கிரீட் கர்டர்கள்', கிடைமட்ட வாக்கில் பொருத்தப் பட்டு உள்ளன. ஊமச்சிக்குளம் அருகே கான்கிரீட் கர்டர்களை தயாரிப் பதற்காக பிரத்யேக பணிமனை ஏற்படுத்தப் பட்டது. இங்கு தயாரான கான்கிரீட் கர்டர்கள் சரக்கு லாரிகளில் கொண்டு வரப் பட்டு, ஹைட்ராலிக் கிரேன் மூலம் தூண்கள் மேலே பொருத்தப் பட்டது. இதனைத்தொடர்ந்து அவை கான்கிரீட் மற்றும் இரும்பு மோல்டுகள் வாயிலாக இணைக்கப் பட்டு வருகின்றன. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 95 சதவீதம் முடிந்து விட்டது.
பறக்கும் மேம்பாலத்தின் மேல் தார்ச் சாலை மற்றும் சென்டர் மீடியன் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. பாலத்தின் கீழ் பகுதியில் 4 வழிச் சாலை அமைக்கும் பணி, தூண்களுக்கு இடையே இரும்புத்தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி, சாலையோர நடைபாதை அமைக்கும் பணி ஆகியவை உச்சகட்ட வேகத்தில் நடந்து வருகின்றன. பறக்கும் மேம்பாலத்தின் கீழ் இரவை பகலாக்கும் வகையில் ஒவ்வொரு தூணுக்கும் இடையே பெரிய எல்.இ.டி. பல்பு, தூணைச்சுற்றி 4 திக்குகளிலும் சிறிய எல்.இ.டி. பல்புகள் பொருத்தும் பணி நடக்கிறது.
பாலத்தின் கீழ் பொதுமக்களை கவரும் வகையில் வைக்கப் பட்டுள்ள டால்பின் சிலை.
மதுரை-நத்தம் பறக்கும் பாலத்தின் கீழ் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டப் பணிகள் நடந்துள்ளன.ஊமச்சிக்கு ளம், திருப் பாலை, அய்யர்பங்களா உள்ளிட்ட பகுதிகளில் பாலத்தின் கீழ் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வும், பொழுது போக்கும் வகையில் சிறிய அளவிலான பூங்காங்கள், குழந்தைகளை கவரும் வண்ணம் சோட்டாபீம், டால்பின், விவசாயி போன்ற சிலை கள் அமைக்கப் பட்டுள்ளன.
மதுரையில் இருந்து நத்தம் வரை 4 வழிச் சாலை அமைய உள்ளது. அடுத்த படியாக நத்தத்தில் இருந்து திருச்சி-துவரங்கு றிச்சி க்கு 4 வழிச் சாலை அமைக்கப் பட உள்ளது. எனவே மதுரை-நத்தம் பறக்கும் பாலம் வழியாக திருச்சி சென்றால் 24 கி.மீ. பயண தூரம் குறையும். மதுரையில் இருந்து சென்னை செல்வோரும், இந்த சாலையை பயன்படுத்த இயலும். அவர்களுக்கு ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும். நகரில் போக்குவரத்து நெரிசலும் இந்த பாலத்தின் மூலம் குறைய வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே திண்டுக்கல் சாலையை திருச்சி உடன் இணைக்கும் வகையில், வாடிப் பட்டி- சிட்டம்பட்டி இடையே 4 வழிச் சாலை அமைக்கப் படுகிறது. இந்த சாலையும் பயன்பாட்டுக்கு வந்தால், மதுரையில் வசிக்கும் பெரும்பாலானோர் நத்தம் சாலையை போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வாய்ப்பு உண்டு. அதிலும் குறிப் பாக, நகரின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி சீக்கிரமாக திண்டுக்கல் செல்ல முடியும். அதுவும் தவிர மதுரை மாநகரில் இருந்து வெளிநகரங்களுக்கு செல்லும் 30 சதவீதம் பேர், நத்தம் பறக்கும் பாலத்தை பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை- நத்தம் இடையேயான பறக்கும் பாலம் சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. தமிழகத்திலேயே மிகவும் நீளமான பாலமாக இந்த பாலம் விளங்குகிறது. இதனை வருகிற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்