search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ தடுப்பு பயிற்சி"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • அவசர ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் பணியாளர்களுக்கு துணை ஆணையர் அருணாசலம், உதவி ஆணையர் யக்ஞநாரயணன் முன்னிலையில், மதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன், மாரிமுத்து, தீயணைப்பு-மீட்பு பணிகள் துறை பணியாளர்களால், தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் தீயின் வகைகள், அவற்றை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? அவசர ஆபத்து காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது. தீயின் தன்மைக்கேற்ப தீயணைப்பான்கள், கார்பன்-டை ஆக்ஸைடு, நுரை, பவுடர், ஈர சாக்குகள், தண்ணீர், மற்றும் மணல் கொண்டு தீயணைக்கும் பயிற்சி, நிலைய அலுவலரால் செய்து காண்பிக்கப்பட்டது.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது பக்தர்களுக்கு ஏற்படும் மூச்சு திணறல், மயக்கம், போன்றவற்றிற்கு எவ்வாறு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்புவது? பற்றியும் செயல்முறை விளக்கம் பற்றியும் அப்பல்லோ மருத்துவமனை முதலுதவி மருத்துவ நிபுணர் டாபிக், கோவிலின் முதலுதவி மருத்துவ மைய மருத்துவர்கள் ஜனார்த்தனன் ராஜா, சாம்ராட் பாலாஜி மற்றும் மருத்துவ குழுவினரால் நடத்தி காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் அயல்பணி கண்காணிப்பாளர்கள், காவல் துறை பணியாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×