search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓலை பெட்டி"

    • 55 வருடங்களாக இந்த பனை ஓலை பெட்டிகளை உருவாக்கி கொண்டிருக்கிறேன் என்று மூதாட்டி ராமு கூறினார்.
    • பிளாஸ்டிக் பொருட்களில் உணவை வைத்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடுதான் என்று மூதாட்டி தெரிவித்தார்.

    உடன்குடி:

    உடன்குடியில் இருந்து செட்டியாபத்து வழியாக மெஞ்ஞானபுரம் செல்லும் மெயின் ரோட்டின் கரையில் பெட்டிக்கடை வைத்து கண்காணித்துக் கொண்டிருக்கும் 75 வயது மூதாட்டி ராமு. பனைமரத்து இளம் குருத்து ஓலைகளை பக்குவப்படுத்தி, அதற்கு வண்ணம் தீட்டிபனை ஓலை பெட்டிகளை தயார்செய்து கொண்டிருந்தார். அவர் கூறியதாவது:-

    சுமார் 55ஆண்டுகளுக்கு முன்பு எனது 20 வயதில் பனைஓலைக்கு எப்படி வர்ணம் தீட்டி, அதை எப்படி உருவாக்க வேண்டும்என்றுஎனது தாயார் எனக்கு விளக்கம் கொடுத்தார். அன்று முதல் இன்று வரை சுமார் 55 வருடங்களாக இந்த பனை ஓலை பெட்டிகளை உருவாக்கி கொண்டிருக்கிறேன்.

    ஒரு பெட்டியை 10 பைசாவுக்கு என்னிடம் கொள்முதல் செய்த வியாபாரி பனை ஓலை பெட்டியை இன்று ரூ.30 -க்கு வாங்குகிறார்கள். இடையில் திருமணம், வெளியூர் பயணம் என சுற்றி விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி வந்து பனை ஓலைப் பெட்டியை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமானவர்கள் என்னிடம் பனை ஓலை பெட்டி மொத்தமாக கேட்கிறார்கள்.

    பனை ஓலை பெட்டியை பொறுமையாக இருந்து செய்வதற்கு இப்போது ஆள் இல்லை, நான் ஒரு நாளைக்கு 10 பெட்டிகளை உருவாக்குவேன் 300 ரூபாய்க்கு என்னிடம் வாங்குகிறார்கள், பனை ஓலைக்கு வண்ணம் தீட்டுதல், பனை ஓலை கழிவு என போய் விட்டால் 10 பெட்டிக்கு ரூ.200 கிடைக்கும். சுற்று எந்த சூழ்நிலையிலும் தடையில்லாத பனை ஓலை பெட்டிக்கு எப்போதும் மவுசு அதிகம்தான். உணவு பொருளை இந்த பெட்டியில் வைத்து ஒரு நாள் இரு நாள் என பாதுகாத்து சாப்பிடலாம்.

    உடம்புக்கு கெடுதல் இல்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வண்ண வண்ண மாடலில் எத்தனை பொருட்கள் வந்தாலும் அதில் உணவை வைத்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு, எப்போதும் மக்களுக்கு பயன் தரக்கூடியது பனை ஓலை பெட்டி தான் என்று மூதாட்டி கூறினார்.

    ×