search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடுப்புகள்"

    • பண்டிகை திருநாளை யொட்டி மண்அடுப்புகள், மண்பானை அதிக விற்பனை செய்யப்படும்.
    • மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 15-ந்தேதியும், 16-ந்தேதி மாட்டு பொங்கலும், அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் என வரிசையாக விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

    பொங்கல் பண்டிகை என்றாலே தித்திக்கும் கரும்புடன் பாரம்பரிய மண்பானைகள், மண் அடுப்புகள் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். பொங்கல் பண்டிகை அன்று பாரம்பரிய முறைப்படி புதிய மண்பானை வாங்கி பொட்டு வைத்து பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி மண் அடுப்பில் ஏற்றி பொங்கல் வைப்பார்கள். இந்த நடைமுறை பல ஆண்டு காலமாக தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கூட இந்த முறையை தான் பின்பற்றி வருகின்றனர்.

    தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 18 நாட்களே உள்ளன. இதனை முன்னிட்டு தஞ்சையில் தற்போது பல்வேறு இடங்களில் கரும்புகள் விற்பனை தொடங்கியுள்ளது.

    அதேபோல் தஞ்சை கீழவாசல் குயவர் தெருவில் மண்பானைகள், அடுப்புகள் செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் தயார் செய்யப்பட்ட மண்பானை , அடுப்புகள் விற்பனையும் நடந்து வருகிறது. இது தவிர வியாபாரிகளும் மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும்போது:- தற்போது மக்கள் மீண்டும் மண்பாண்ட பொருட்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

    குறிப்பாக பொங்கல் பண்டிகை மண்பாண்ட தொழிலுக்கு எப்போதுமே புத்துயிர் வழங்கும் பண்டிகை. அன்றயை தினம் மண்பானைகள், அடுப்புகள் அதிகளவில் விற்பனை ஆகும். கோவில், கிராமபுறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் மக்கள் புதுமண்பானைகளில் பொங்கல் வைப்பதை விரும்புகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ளதால் வரும் நாட்களில் மண்பானை , அடுப்புகளின் விற்பனை அதிக அளவில் நடக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

    ×