search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "22-வது ஆண்டு விழா"

    • குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த திருவள்ளுவர் சிலை நிறுவிய ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
    • கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை வளாகத்தில் மாதிரி திருவள்ளுவர் சிலையை வைத்து அதற்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை கடந்த 2000 ஆண்டு ஜனவரி 1-ந்தேதி புத்தாயிரம் ஆண்டு மலரும்போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவிய 22-வது ஆண்டுவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த திருவள்ளுவர் சிலை நிறுவிய ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

    தற்போது திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. இதையொட்டி நாளை காலை 9 மணிக்கு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை வளாகத்தில் மாதிரி திருவள்ளுவர் சிலையை வைத்து அதற்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்றம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.

    ×