search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசநோய் விழிப்புணர்வு"

    • உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளாக காசநோய் பொதுமக்கள் மத்தியில் பரவி உள்ளது.
    • நிகழ்ச்சியில் அனைவரும் காசநோய் ஒழிப்பு குறித்து உறுதி மொழி ஏற்றனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சுகாதார இணை இயக்குநர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் சாந்தி நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளாக காசநோய் பொதுமக்கள் மத்தியில் பரவி உள்ளது.நுரையீரலில் ஏற்படும் நுண்ணுயிர் தொற்று காரணமாகவும், கண்ட இடத்தில் எச்சில் துப்புவதாலும் காசநோய் கிருமிகள் காற்றில் கலந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது.

    காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயை உண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி, இரைப்பை-குடல் தொகுதி, எலும்புமூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பல பகுதிகளிலும் நோயுண்டாக்கி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    எனவே பொதுமக்கள் நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள எதிர்ப்பு சக்திகள் அதிகமுள்ள சத்தான சிறுதானிய உணவுகள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தொடர்ந்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அனைவரும் காசநோய் ஒழிப்பு குறித்து உறுதி மொழி ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர்பாலசுப்ரமணியம்,காசநோய் ஒழிப்பு திட்ட துணை இயக்குநர் ராஜ்குமார், நுரையீரல் சிறப்பு மருத்துவர் செந்தில்குமார், மருந்தாளுநர் முத்துசாமி, பயிற்சி செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    செல்ப் அறக்கட்டளை மற்றும் அரக்கோணம் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணித்திட்டம் சார்பாக ஆதிதிராவிடர் பெண்கள் மின் நிலைப்பள்ளியில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அம்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தோத்திராவதி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, செல்ப் அறக்கட்டளை செயலாளர் கோவி. பார்த்திபன், குளோ அறக்கட்டளை தலைவர் பி.ஜேம்ஸ், உடற்கல்வி ஆசிரியர் செல்வநாதன், ஆசிரியர்கள் தினேஷ், பாரதி, மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலூர் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகலா, அரக்கோணம் அரசு மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் டாக்டர் ரெஜினா, காசநோய் மேற்பார்வையாளர் ஏ.தனஞ்செழியன், சுகாதாரப் பார்வையாளர்கள் எம்.உஷா மற்றும் கே.அருள் ஆகியோர் கலந்து கொண்டு செல்ப் அறக்கட்டளை தன்னார்வலர்கள் கோ.முருகேசன், நந்தினி, ப.சுஜித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×