என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொறியாளர் ஆய்வு"
- பொன்குறிச்சி வரை செயல்படுத்தப்பட்டு வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறி யாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- ராசிபுரம் புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும் அவர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ராசிபுரம்:
நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் நெடுஞ் சாலை உட்கோட்டத்தில் பாலப்பாளையத்திலிருந்து பொன்குறிச்சி வரை செயல்படுத்தப்பட்டு வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறி யாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராசிபுரம் புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும் அவர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ராசி புரம் உட்கோட்டம் குருசாமி பாளையம் ஏரிக்கரை பகுதியில் மரக்கன்றுகளை நட்டு, பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் குணா, ராசி புரம் நெடுஞ்சாலை கட்டு மானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சாலை விரிவாக்க பணிகள் ரூ.40 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
- உதவிப் பொறியாளர், மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
பல்லடம் :
திருப்பூர் நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில், பல்லடம் - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், வடிகால் கட்டுதல், தடுப்புச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட சாலை விரிவாக்க பணிகள் ரூ.40 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை சென்னை தலைமை பொறியாளர் சந்திரசேகர் ( கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது சாலை விரிவாக்க பணிகளை தரமாகவும், அதே நேரத்தில் விரைவாகவும், பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை திருப்பூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர், தரக் கட்டுப்பாடு கோட்ட பொறியாளர், பல்லடம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர், மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்