search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ் சில்வர்வுட்"

    • கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
    • அவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    கொழும்பு:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி ஒரு வெற்றி, இரு தோல்வி, ஒரு முடிவில்லை என 3 புள்ளிகள் மட்டுமே பெற்று லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

    உலகக்கோப்பையில் இலங்கையின் மோசமான செயல்பாடு இதுவாகும். இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் (இங்கிலாந்து) நேற்று பதவியை ராஜினாமா செய்தார்.

    கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது. மற்றபடி பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

    • கடந்த மாதம் கொச்சியில் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
    • ஐ.பி.எல். வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கலக்கிய இலங்கை கேப்டனும், ஆல்-ரவுண்டருமான தசுன் ஷனகா நேற்று முன்தினம் முதலாவது ஒரு நாள் போட்டியில் 88 பந்துகளில் 108 ரன்கள் நொறுக்கினார்.

    இதனால் அவருக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டம் கிட்டும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஷனகா தன்னிடம் உள்ள திறமை என்ன என்பதை உலகுக்கு நிரூபித்து காட்டியுள்ளார். அதிரடியாக ஆடக்கூடிய அவரை நிச்சயம் ஐ.பி.எல். அணிகள் கவனத்தில் வைத்திருக்கும். ஐ.பி.எல். வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    என்று சில்வர்வுட் குறிப்பிட்டார்.

    கடந்த மாதம் கொச்சியில் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் ஷனகாவுக்கு ரூ.50 லட்சம் தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×