என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்.ஜி.ஆர். பிறந்த நாள்"
- 1000 பேருக்கு அன்னதானம்
- பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினர்
செய்யாறு:
செய்யாறு நகர அண்ணா திமுக சார்பில் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா நேற்று ஆரணி கூட்ரோடு, கொடநகர் பகுதிகளில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கி எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், அரங்கநாதன், மாவட்ட நிர்வாகிகள் அருணகிரி, ரவிச்சந்திரன், மெய்யப்பன், பூக்கடை கோபால், கோவிந்தராஜ் நகர நிர்வாகிகள் தணிகாசலம், இளையராஜா, சுரேஷ், எழில், பிரகாஷ், வெங்கடேசன், கோபி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று செய்யாறு ஒன்றிய அண்ணா திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கி எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு, வேட்டி, சேலை பிரியாணி பொட்டலங்களை வழங்கினார்.
- 2 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் மற்றும் அன்னதானம் வழங்கி வருகிறார்.
- நிர்வாகிகள் வெங்கிடு, ராகவன், சிவகுமார், சின்னத்தம்பி, உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் ஆண்டுதோறும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் மற்றும் அன்னதானம் வழங்கி வருகிறார். அதேபோல் இந்த ஆண்டும் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாளையொட்டி திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வாலிபாளையம், கே.பி.என். காலனி, பெரியார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 குடும்பங்களுக்கு ஆயிரம் லிட்டர் பால், மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் முத்து அவிநாசி அப்பன், நிர்வாகிகள் வெங்கிடு, ராகவன், சிவகுமார், சின்னத்தம்பி, உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
- முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெய ராமன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
- பூத் கமிட்டி, பாசறை அமைப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழக அலுவல கத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெய ராமன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில், திருப்பூரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, மேலும் பார்க் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டாடுவது. பூத் கமிட்டி, பாசறை அமைப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கட்சி நிர்வாகிகள் சிட்டி பழனிசாமி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, ஏ.எஸ்.கண்ணன், வி.பி.என்.குமார், கே.பி.ஜி.மகேஷ்ராம், தம்பி மனோகரன், கேச வன், பட்டுலிங்கம், கருணாகரன், திலகர் நகர் சுப்பு, ஹரிஹரசுதன், வேலுமணி, பி.கே.எம்.முத்து, சுந்தராம்பாள், கலைமகள் கோபால்சாமி, சென்னிமலை கோபால கிருஷ்ணன் உள்பட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்