என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொடியேந்தி வரவேற்பு"
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. கொடியேந்தி வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர்கள் பி.மூர்த்தி, கோ.தளபதி, மணிமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
- துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கழகத்தினர் என பெரும் திரளானோர் பங்கேற்க வேண்டுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
மதுரை
மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள், அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடபட்டிமணிமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை (17-ந்தேதி) வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்று விலை உயர்ந்த கார், மோட்டார் பைக், தங்கக்காசுகள் என பல்வேறு பரிசுப் பொருட்களை சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் வழங்கி பாராட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலங்கா நல்லூர் வருகைதர உள்ளார். இதற்காக இன்று (16-ந் தேதி) விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மாலை 7 மணியளவில் வருகை தர உள்ளார்.
எனவே வரலாறு காணாத வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாபெரும் வரவேற்பு கொடுக்கும் வகையில் தி.மு.க.வினர் கையில் இருவண்ண கொடியேந்தி எழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமாயும், இந்த மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட கழகத்தினர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கழகத்தினர் என பெரும் திரளானோர் பங்கேற்க வேண்டுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.