search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்களில் சோதனை"

    • பொங்கல் பண்டிகை ஒட்டி அதிக அளவில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, சேலம் மண்டலத்தில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய 18 பேர் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    பொங்கல் பண்டிகை ஒட்டி அதிக அளவில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, சேலம் மண்டலத்தில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் ஆகிய இரு சுங்கச்சாவடிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய 18 பேர் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று மாலை வரை 50 ஆம்னி பஸ்களில் சோதனை நடந்தது. கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வராத நிலையில், அதில் அதிக ஒலி எழுப்பியது, கண் கூசும் அளவில் முகப்பு விளக்குகளை எரியவிட்டது உள்ளிட்ட குறைகளை கண்டறிந்து ரூ.11/4 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    வரும் 16-ந் தேதி வரை வாகன சோதனை நீடிக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×