search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படையப்பா யானை"

    • சாலையில் செல்வோரையும் அச்சப்படுத்துவதில் படையப்பா யானை பிரபலமாகி உள்ளது.
    • யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    காட்டுப்பகுதிகளில் இருந்து சாலைக்கு வந்து வாகனங்களை யானைகள் மறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. இதனால் வனப்பகுதி சாலைகளில் செல்வோர் பெரும் அச்சத்துடனேயே பயணிப்பார்கள்.

    இந்த வகையில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வசிக்கும் மக்களை மட்டு மின்றி, அந்த வழியாக சாலையில் செல்வோரையும் அச்சப்படுத்துவதில் படையப்பா யானை பிரபலமாகி உள்ளது.

    இந்த யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் மூணாறு-மறையூர் சாலையில் சம்பவத்தன்று நள்ளிரவு கேரள அரசு பஸ் சென்றது. திருவனந்தபுரத்தில் இருந்து பழநி நோக்கி சென்ற அந்த பஸ், ராஜமலை அருகே சென்ற போது, படையப்பா யானை வழிமறித்துள்ளது.

    பஸ்சின் முன்பக்க கண்ணாடியை தனது தந்தத்தால் யானை தாக்கிய போதும், டிரைவர் சாதுரியமாக பஸ்சை இயக்கி யானையை கடந்து சென்றார். இதனை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • மூணாறு காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று அட்டூழியம் செய்து வருகிறது.
    • வாட்ஸ் அப் குழுவில் படையப்பா யானை இன்று எங்கே செல்கிறது, அதன் நடமாட்டம் குறித்த தகவல்களை பரிமாறி வருகிறார்கள்.

    கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறு காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று அட்டூழியம் செய்து வருகிறது. அடிக்கடி ஊருக்குள் புகுந்து தோட்டங்களை சேதப்படுத்தி தொழிலாளிகளையும் அச்சுறுத்தி வருகிறது.

    இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் படையப்பா என்று பெயரிட்டுள்ளனர். இந்த யானை பெயரில் அவர்கள் ரசிகர் மன்றம் தொடங்கியதோடு, வாட்ஸ் அப் குழு ஒன்றையும் உருவாக்கி உள்ளனர். அந்த குழுவில் படையப்பா யானை இன்று எங்கே செல்கிறது, அதன் நடமாட்டம் குறித்த தகவல்களை பரிமாறி வருகிறார்கள்.

    ×