search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்ஸ் சமையல்"

    • ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
    • ஓட்ஸில் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1 கப்

    தண்ணீர் - 1 1/2 கப்

    அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    கேரட் - 1

    முட்டைகோஸ் - சிறிய துண்டு

    சீரகம் - 1/2 தேக்கரண்டி

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    உப்பு - 1 தேக்கரண்டி

    நெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * கேரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.

    * வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஓட்ஸில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ்,

    சீரகம், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    * பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

    * இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம் தயார்!

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவும்.
    • ஓட்ஸில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1/2 கப்

    பாசி பருப்பு - 1/2 கப்

    வெங்காயம் - 1

    இஞ்சி - 1

    பச்சை மிளகாய் - 2

    கேரட் - 1

    பீன்ஸ் - 10

    பச்சை பட்டாணி - 1/4 கப்

    பெருங்காய தூள் - சிறிதளவு

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    உப்பு, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    நெய் - 2 தேக்கரண்டி

    பட்டை - 1துண்டு

    சீரகம் - 1 தேக்கரண்டி

    தண்ணீர் - 3 கப்

    செய்முறை

    வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசி பருப்பை அரை மணிநேரம் ஊறவைக்கவும்

    கடாயில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, சீரகம் போட்டு தாளித்த பின்னர், வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கேரட், பீன்ஸ், பட்டாணி, பெருங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    காய்கறிகள் வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் ஊறவைத்த பருப்பு, ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

    உப்பு சரிபார்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும்.

    இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் கிச்சடி ரெடி.

    • நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. 
    • ஓட்ஸில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ், கேழ்வரகு மாவு - தலா ஒரு கப்,

    மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    பெரிய வெங்காயம் - ஒன்று

    கேரட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    பொட்டுக் கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

    தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்,

    நெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, ப.மிளகாயை போட்டு நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை மாவு, தயிர் சேர்த்து சிறிதளவு நீர் விட்டுக் கலந்து நன்கு கெட்டியாக பிசையவும். 

    கொஞ்சம் மாவை எடுத்து சிறு உருண்டயாக்கி, வாழையிலை (அ) பிளாஸ்டிக் கவரில் நெய் தடவி, அதன் மீது உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து நெய் தடவி சூடானதும் ரொட்டியைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    ×