search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிஷன் சக்தி"

    • ஒடிசா மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மிஷன் சக்தி என்ற திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தார்.
    • மிஷன் சக்தி திட்டத்தை செயல்படுத்தும் விதம் குறித்து ஒடிசா மாநில மிஷன் சக்தி இயக்குநர் சுஜாதா விளக்கமளித்தார்.

    புவனேஷ்வர்:

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டு திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக ஓடிசா மாநிலத்தில் இளைஞர்களின் திறனை மேம்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தை பார்வையிட்டு, இளைஞர்களை தேர்வு செய்தல், திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்குதல், பல்வேறு நாடுகளில் இளைஞர்களை பணியமர்த்துதல் போன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் ஒடிசா மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மிஷன் சக்தி (Mission Sakthi) என்ற திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், இத்திட்டம் எவ்வாறு மாபெரும் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பது குறித்தும் கலந்தாலோசித்தார். மேலும் மிஷன் சக்தி திட்டத்தினை ஒடிசா மாநிலத்தின் அனைத்து துறைகளும் எவ்வாறு இணைந்து செயல்படுத்துகின்றன என்பது குறித்து ஒடிசா மாநில மிஷன் சக்தி இயக்குநர் சுஜாதா விளக்கமளித்தார், அப்போது இத்திட்டம் குறித்து அனைத்து அலுவலர்களுடன்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கலந்துரையாடினார்.

    இந்நிகழ்வில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் முதன்மை செயலாளர் முனைவர். அதுல்யா மிஸ்ரா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் பெ.அமுதா,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  ச.தின்யதர்சினி,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கா.ப. கார்த்திகேயன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×