search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை பாதுகாப்பு"

    • வன பாதுகாப்புத்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை அமைப்பு சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முறைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

     உடுமலை:

    உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் மாவடப்பு செட்டில்மென்ட் கிராமத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாசா தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டம், வன பாதுகாப்புத்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை அமைப்பு சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, தன் சுத்தம் பேனல், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பது, குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முறைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், வன பாதுகாப்பு அலுவலர் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மலைவாழ் மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்.
    • பெண் குழந்தைகளுக்கு கல்வி, விழிப்புணர்வு, மன தைரியம், பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன.

    பொன்னேரி நகராட்சி மன்ற அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் பெண் குழந்தைகளுக்கு கல்வி, விழிப்புணர்வு, மன தைரியம், பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன, ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் கோபிநாத், துணைத் தலைவர் விஜயகுமார், மகளிர் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தீஸ்வரி மாவட்ட குழந்தைகள் நல தலைவர் மேரி அக்சிலியா, கவுன்சிலர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×