search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராய வியாபாரிகள்"

    • பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணி.
    • போலீசார் 10 பேரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் நடத்திய அதிரடி வேட்டையில் காடாம்புலியூர் அடுத்த புதுப்பாளையம் சதாசிவம், கானஞ்சாவடி ஏழுமலை, வேலன்குப்பம் விக்ரமன் (25) அன்னகாரன்குப்பம் சக்திவேல்(35) எலவத்தடிகிழக்கு தெரு கட்டை என்ற சந்திரசேகர் (50)உள்ளிட்ட 10 பேரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் நடத்திய அதிரடி வேட்டையில் திருவள்ளுவர் நகர்முத்து (30), அம்பேத்கர் நகர்சரவணன் (37), சக்திவேல்(63),பாரதி நகர் சின்னையன் (62)ஆகியோர்கள் மதுபாட்டில் வைத்திருந்ததாக போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

    • திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் எடுத்து செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் வாகனதனிக்கையில் இருந்தனர்,
    • பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் போலீஸாரை தாக்கிவிட்டு சென்றனர்

    விழுப்புரம்::

    திண்டிவனம் அருகே ரோசனை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் எடுத்து செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர ராஜேந்திரன், காவலர்கள் வெற்றி வேல் மற்றும் அறிவுமதி ஆகியோரின் தலைமையில் போலீசார் தீவனூர் பீம் சிட்டி பழைய காலனி அருகே வாகனத் தணிக்கையில் இருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் நிறுத்தாமல் போலீசாரை தாக்கி தள்ளிவிட்டு சென்றனர் . உடனே போலீசார் பின் தொடர்ந்து துரத்தினர். அப்போது 2 பேரில் ஒருவர் பிடிபட்டார். அவரது பெயர் தேவா என தெரியவந்தது. இவர் ரெட்டணை கிராமத்தை சேர்ந்தவர். தப்பி ஓடியவர் நாகராஜ் என தெரியவந்தது. உடனே தேவாவை கைதுசெய்தனர். இவரிடம் இருந்து 60லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    ×