search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மடிக்கணினி"

    • அலுவலக மடிக்கணினிகள் தொழிலாளர்கள் "டார்க் வெப்" பயன்படுத்துகின்றனர்.
    • தங்கள் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளில் 18+ உள்ளடக்கத்தை தொழிலாளாளர்கள் பார்க்கின்ற்னர்.

    90% தொழிலாளர்கள் தங்கள் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளை தனிப்பட்ட வேலைகளுக்கே பயன்படுத்துகின்றனர் என்று சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இது சைபர் செக்யூரிட்டி பிரச்சனைகளை உருவாக்கும் என்று ESET தெரிவித்துள்ளது.

    ESET நடத்திய ஆய்வில், பணியாளர்களில் பெரும் பகுதியினர் தங்கள் நிறுவனம் வழங்கிய மடிக்கணினிகளில் 18+ உள்ளடக்கத்தை பார்ப்பது, இணைய சூதாட்டத்தில் ஈடுபடுவது, தடை செய்யப்பட்ட டார்க் வெப் தளங்களை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    ஆய்வில் பதில் அளித்த தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு (63%) பேர் "டார்க் வெப்" தளங்களை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவதாகவும் 17% பேர் தினமும் டார்க் வெப் தளங்களை பயனபடுத்துவதாகவும் தெரிவித்தனர். பெண்களை விட ஆண்களே அதிக அளவில் டார்க் வெப் பயன்படுத்துகின்றனர்.

    சைபர் செக்யூரிட்டி பிரச்சனைகள் இருந்தாலும், அலுவலக மடிக்கணினிகளில் தங்களது தனிப்பட்ட செயல்பாடுகளை கண்காணிப்பது தங்களது தனியுரிமையை மீறும் செயல் என்று மூன்றில் ஒருவர் (36%) கருத்து தெரிவித்தனர்.

    ஐந்தில் ஒருவர் (18%) தங்கள் அலுவலக மடிக்கணினிகளில் இணையப் பாதுகாப்பு மென்பொருள் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

    • சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் கஜேந்திரவரதன் (65), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.யான இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தருமபுரி செல்வதற்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
    • சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.அதிகாலை 2.30 மணிக்கு 5 ரோடு அருகே பஸ் வந்த போது அவரது மடிக்கணினி இருந்த பை மாயமானது தெரிய வந்தது.

    சேலம் :

    சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் கஜேந்திரவரதன் (65), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.யான இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் தருமபுரி செல்வதற்கு சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து டவுன் பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து டவுன் பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.அதிகாலை 2.30 மணிக்கு 5 ரோடு அருகே பஸ் வந்த போது அவரது மடிக்கணினி இருந்த பை மாயமானது தெரிய வந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் திருடியதை அறிந்த அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
    • மடிக்கணினிக்கு தேவையான ‘சிப்' தற்போது சந்தையில் போதுமான அளவில் இல்லை.

    சென்னை:

    சென்னையில் நடந்த தனியார் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான விவரங்களை பதிவேற்றம் செய்யும் நிதித்துறையின் இணையதளத்தில் பிரச்சினை இருந்தது. அதனை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து, தற்போது அவை சரிசெய்யப்பட்டு, அந்த இணையதளம் வழக்கம்போல் இயங்குகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் தற்போது வழங்கப்படுகிறது.

    கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம். விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இலவச மடிக்கணினி (லேப்டாப்) திட்டத்தில், 11 லட்சம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியிருக்கிறது. மடிக்கணினிக்கு தேவையான 'சிப்' தற்போது சந்தையில் போதுமான அளவில் இல்லை. இதனால் விரைவில் கொள்முதல் செய்து, மாணவ-மாணவிகளுக்கு தேவையான மடிக்கணினிகள் வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×