search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி பதக்கம்"

    • காவல்துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
    • தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐ.ஜி. பவானீஷ்வரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவரின் வீர செயல்களுக்கான விருது, சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கான விருது, குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது ஆகியவை வழங்கப்படுவது உண்டு.

    அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் மொத்தம் 954 காவலர்களுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    காவல்துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐ.ஜி. பவானீஷ்வரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல ஜனாதிபதியின் மெச்சத்தக்க சேவைக்கான ஜனாதிபதி விருது தமிழகத்தை சேர்ந்த 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை பெருநகர துணை ஆணையர் அரவிந்த், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, சென்னை துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பெரம்பலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன், தஞ்சாவூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு, திருப்பூர் மாவட்ட காவல் ஆய்வாளர் முத்து மலை, கோவை நகர காவல் கண்காணிப்பாளர் புகழ் மாறன் உள்ளிட்ட 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    • ஜனாதிபதி பதக்க விருதுக்கு தமிழக போலீஸ் அதிகாரிகள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அதிகாரிகளை தேர்வு செய்துள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி பதக்க விருதுக்கு தமிழக போலீஸ் அதிகாரிகள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    போலீஸ் ஐ.ஜி.தேன் மொழி, டி.எஸ்.பி.க்கள் பொன்ராமு, ரவிசேகரன் ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகிறது.

    இதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. இதன்படி இவர்கள் 3 பேரும் விரைவில் ஜனாதிபதி பதக்கத்தை பெற உள்ளனர்.

    நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் இருந்தும் ஜனாதிபதி பதக்கத்துக்கு போலீஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    மொத்தம் 21 போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுகிறது.

    மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக இந்த அதிகாரிகளை தேர்வு செய்துள்ளது.

    ×