search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் லாரிகள்"

    • 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது.
    • சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. சாலையும் மிகவும் படுமோசமான குண்டும் குழியுமாக உள்ளது.

    கடலூர்:

    சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகளுக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் வட்டம், மாமங்கலம் ஊராட்சி ஆண்டி ப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புத்தேரியில் எடுக்கப்படும் செம்மண் மணல் கற்களை லாரியில் ஏற்றி செல்கிறார்கள்.

    தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்ப டையில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாமங்கலம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருவதால் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சாலை வழியாக பள்ளிக்கு வருகிறார்கள்.

    அப்பொழுது செம்மண் ஏற்றி செல்லும் லாரி அதி வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாலைகளிலே தண்ணீர் ஊற்றி செல்வதால் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. சாலையும் மிகவும் படுமோசமான குண்டும் குழியுமாக உள்ளது.

    இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி பேருந்துகளும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களும் அவதி அடைந்து ஒதுங்க கூட முடியவில்லை. மணல் ஏற்றி வரும் லாரிகள் சாலைகளில் விதிமுறை களை பின்பற்றாமல் அதி வேகமாக சென்று வருகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் கூட லாரியின் வேகத்தை குறைக்காமல் சென்று வருவதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமா என பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    அது மட்டும் இன்றி தனியார் நிலங்களில் மண் குவிக்கப்பட்டு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. செம்மண் எடுக்கும் இடத்தில் அரசு அறிவித்த அளவைவிட 50 அடிக்கும் மேலாக வெட்டப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

    பள்ளி ஆரம்பிக்கும் நேரங்களில் லாரிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் கோரிக்கை விடுத்தது உள்ளனர்.

    ×