search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adolescent tried to set fire to வாலிபர்"

    • சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டுப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் கார்த்திக், மகள்கள் நிதியா, வெண்ணிலா ஆகியார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
    • அப்போது கார்த்திக் தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டுப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மகன் கார்த்திக், மகள்கள் நிதியா, வெண்ணிலா ஆகியார் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது கார்த்திக் தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்தனர். பின்னர் அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் நாங்கள் அதே பகுதியில் 3 செண்ட் நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். இந்த இடத்தை அருகில் உள்ளவர்கள் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 21 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்தியா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
    • எனவே காரிப்பட்டி போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்பதற்காகவே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளி ராஜமாணிக்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராகதேவன் (வயது 21). இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீரென தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ராகதேவனை தடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கூறுகையில், கடந்த 21 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்தியா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நித்யாவின் பெற்றோர் வந்து, நித்யாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். மேலும் நித்யாவை அழைத்து வர, அவர் வீட்டிற்கு சென்றபோது என்னை விரட்டி விட்டனர்.

    எனவே காரிப்பட்டி போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்பதற்காகவே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் என்றார். போலீசார் தொடர்ந்து ராகதேவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×