என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பன்னாட்டு"
- தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நாளை நடைபெறவுள்ளன.
- மாறி வரும் காலச் சூழலுக்கேற்ப தமிழ்க் கற்பித்தல் முறைகளில் புதுமையையும், தொழில்நுட்பத்தையும் இணைக்க வேண்டிய தேவை உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி இரு நாள்கள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தா் திருவள்ளுவன் கூறியிருப்பதாவது:-
மாறி வரும் காலச் சூழலுக்கேற்ப தமிழ்க் கற்பித்தல் முறைகளில் புதுமையையும், தொழில்நுட்பத்தையும் இணைக்க வேண்டிய தேவை உள்ளது.
எனவே, 21 ஆம் நூற்றாண்டுத்திறன்களை அடிப்படையாகக் கொண்டு உயா் கல்வி மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் தமிழ்க் கற்பித்தல் முறைகள் நவீன ஆய்வு நுட்பங்கள் பற்றி அறிவியல்ரீதியான கருத்துகளை வெளிக்கொணரும் நோக்கில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நாளை மற்றும் தேதிகளில் நடத்தப்படவுள்ளது.
இதில், பல்வேறு நாடுகளிலிருந்தும், தமிழ்நாடு, புதுச்சேரி, கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் கருத்தாளா்கள், கல்வியாளா்கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்கின்றனா்.
மேலும், 64 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன.
இவற்றில் 45 கட்டுரைகள் தமிழிலும், 19 கட்டுரைகள் ஆங்கிலத்திலும் உள்ளன.
இக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 605 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கோவை தொடக்க விழாவில் வெளியிடப்படும்.
தவிர, பேராசிரியா் சின்னப்பன் எழுதிய திருநங்கைகள் வாழ்வியல், தமிழ் இலக்கண, இலக்கி யங்களில் திருநங்கையா், தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையா், தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையா் சித்தரிப்பு ஆகிய 4 நூல்கள் வெளியிடப்பட உள்ளன. திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி வழங்கும் கலைகள் வழி விழுமியங்களைக் கற்பிக்கும் கலை விழா நடைபெறவுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.