என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்திய மாணவர் பலி"
- பிரணீத் தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் டொரண்டோ நகரில் உள்ள ஏரி ஒன்றிற்கு சென்றார்.
- பிரணீத் உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு பிரணீத்தின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரணீத். இவர் கனடா நாட்டில் தங்கி சமீபத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருந்தார்.
இந்த நிலையில் பிரணீத் தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் டொரண்டோ நகரில் உள்ள ஏரி ஒன்றிற்கு சென்றார். பிரணீத், அவரது அண்ணன் உள்ளிட்ட அனைவரும் ஏரியில் குதித்தனர். ஆனால் பிரணீத்தை தவிர மற்ற அனைவரும் கரை வந்து சேர்ந்தனர். பிரணீத்தை மட்டும் காணவில்லை.
இதையடுத்து மீட்புக்குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் ஏரியில் இருந்து பிரணீத்தின் உடலை மீட்டனர். அவரது உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு பிரணீத்தின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- மாணவர் தாசரி சந்து எதிர்பாராதவிதமாக உறைந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்தார்.
- மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனகாபல்லியை சேர்ந்தவர் தாசரி சந்து (வயது 20). இவர் கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தாசரி சந்து தனது நண்பர்களுடன் அங்குள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.
அப்போது மாணவர் தாசரி சந்து எதிர்பாராதவிதமாக உறைந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்தார். சந்துவின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தங்கள் மகனின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அமைச்சர் கிஷன் ரெட்டி கிர்கிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
- இந்திய மாணவர் மரணத்துக்கு காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
- பிப்ரவரி மாதம் இந்திய வம்சாவளி மாணவர் சமீர்காமத் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
இந்தியாவை சேர்ந்த மாணவர் உமா சத்யசாய் காடே என்பவர் அமெரிக்காவின் ஒகியோவின் கிளீவ்லேண்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் உமா சத்யசாய் உயிரிழந்திருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, ஒகியோவின் கிளீவ்லேண்டில் இந்திய மாணவர் உமா சத்யசாய் காடேவின் துரதிருஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
அவரது குடும்பத்தினருடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. மாணவர் உமா சத்யசாயின் உடலை விரைவில் இந்தியாவுக்கு அனுப்புவது உள்பட அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்திய மாணவர் மரணத்துக்கு காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் 10-வது சம்பவம் இதுவாகும். கடந்த மாதம் கொல்கத்தா நடன கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆந்திர மாணவர், வனப்பகுதியில் பிணமாக கிடந்தார்.
அதே போல் பிப்ரவரி மாதம் இந்திய வம்சாவளி மாணவர் சமீர்காமத் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பலத்த காயம் அடைந்த இந்திய மாணவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
- அகில் சாய் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.
வாஷிங்டன்:
தெலுங்கானா மாநிலம் மதிரா நகரத்தை சேர்ந்தவர் அகில் சாய் (வயது25).
இவர் அமெரிக்கா மண்டோக மெரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ உயர் படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வைத்து இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து அகில் சாய் தலையில் குண்டு பாய்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
இது பற்றி அறிந்ததும் தெலுங்கானாவில் வசித்து வரும் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மகன் உடலை சொந்த ஊர் கொண்டு வர மத்திய அரசும், தெலுங்கானா அரசும் முன் வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அகில் சாய் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்