search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை ரெயில்பாதை"

    • ஜோலார்பேட்டையிலிருந்து கோவைக்கு மற்றுமோர் இரட்டை ெரயில் பாதை அமைக்க ெரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
    • இட அளவீட்டு பணிக்கு ஒரு கி.மீ.,க்கு ரூ.2.50 லட்சமும், இரட்டை ெரயில் பாதைக்கு ஒரு கி.மீ.,க்கு 2லட்ச ரூபாயும் ெரயில்வே துறை நிதி ஒதுக்குகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் வழியாக சென்னை- கோவைக்கு இடையில் ெரயில்கள், பஸ்கள் நிறைய இயக்கப்பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் எதிலுமே டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    சென்னை மற்றும் வட மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு செல்லும் ெரயில்களுக்கு திருப்பூர், கோவையே முக்கிய வழித்தடமாக உள்ளது. அதனால் இந்த வழித்தடத்தில் ெரயில்களின் இயக்கமும் அதிகம்.எதிர்காலத்தில் இந்த ெரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு இரட்டை ெரயில் பாதை அமைக்க வேண்டியது அவசியம்.

    இதனால் ஜோலார்பேட்டையிலிருந்து கோவைக்கு மற்றுமோர் இரட்டை ெரயில் பாதை அமைக்க ெரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கியுள்ளன.இதற்கு தேவைப்படும் இடங்களை ஆய்வு செய்யும் பொருட்டு இறுதி இட அளவீடுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இட அளவீட்டு பணிக்கு ஒரு கி.மீ.,க்கு ரூ.2.50 லட்சமும், இரட்டை ெரயில் பாதைக்கு ஒரு கி.மீ.,க்கு 2லட்ச ரூபாயும் ெரயில்வே துறை நிதி ஒதுக்குகிறது.இதன்படி ஜோலார்பேட்டை - கோவை வரை 282 கி.மீ., தூரம் இறுதி இட அளவீடுக்கு 5 கோடியே 64 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த ெரயில் தடத்தின் தொடர்ச்சியாகவுள்ள, கோவை-சொரனூர் இடையிலான 99 கி.மீ.,தூரத்துக்கும், 3வது மற்றும் 4வது என இரட்டை ெரயில் பாதைக்கான இறுதி இட அளவீடுக்கு ரூ.1.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு புதிய ெரயில் தடங்கள் மற்றும் கூடுதல் இரட்டை ெரயில் பாதைகள் அமைப்பதற்கான இறுதி இட அளவீடுக்கு ரூ.11.52 கோடியை ெரயில்வே வாரியம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இதில் கோவையுடன் தொடர்புடைய இவ்விரு ரெயில் தடங்களுக்கு மட்டும் ரூ.6.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இரட்டை ரெயில்பாதை பணிக்காக மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் வரையில் இரண்டாவது அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

    திருமங்கலம்

    மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் வரையில் இரண்டாவது அகல ெரயில்பாதை பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த பணிகள் திருமங்கலம் வரையில் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து தற்போது திருமங்கலம்-மதுரை இடையே பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இதன் ஒருபகுதியாக திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோ பகுதியில் 2-வது தண்டவாளம் அமைந்துள்ள பகுதியில் உள்ள ஏராளமான மின்கம்பங்களை மாற்றி அமைக்கும்படி ெரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்தது.

    இதனை தொடர்ந்து சிட்கோ பகுதியில் 2-வது அகல ெரயில் பாதையையொட்டியுள்ள மின்கம்பங்கள் மின்சார வயர்களை எதிர்ப்புறம் இடம்மாற்றம் செய்யும் பணிகளில் மின்வாரியம் ஈடு பட்டுள்ளது.

    இந்த பகுதியில் 2-து அகல ெரயில் பாதையையொட்டி இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அனைத்தும் மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிக்ள கூறுகையில் 2-வது அகல ெரயில்பாதையும் மின்சார ெரயில் செல்வதற்கு தகுந்தாற் போல் மின்கம்பிவயருடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே சிட்கோ தொழிற்சாலைகளுக்கான மின்சார டிரான்ஸ்பார்மரும், மின்சார கம்பங்களும் இருந்தன.

    உயர் மின்அழுத்தம் உள்ள ெரயில்வே மின்பாதையின் அருகே மின்சார வயர்கள் மின்கம்ப ங்கள் இருக்கக்கூடாது என்பதால் சாலையின் எதிர்ப்புறம் அவற்றை மாற்றும் 

    ×