search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்கலை சப்-கலெக்டர் அலுவலகம்"

    • பணியிட மாற்றத்தை கண்டித்து 2-வது நாளாக தொடரும் போராட்டம்
    • போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர்களுடன், தக்கலை தாசில்தார் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவுக்குட்பட்டது கீழ் மிடாலம். இங்குள்ள கிராம நிர்வாக அலுவலரை கடந்த வாரம் இடமாற்றம் செய்து, தக்கலை சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டார்.

    இதற்கு குமரி மாவட்ட கிராம நிர்வாக அலுவ லர்கள் சங்கம் எதிர்ப்பு தெரி வித்தது. மேலும் அவர்கள் தக்கலை சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தை பலனளிக்காததால் இந்தப் போராட்டம் இரவு வரை நீடித்தது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் திங்கட்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது என கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் விடுப்பு எடுத்து, தக்கலை சப்-கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

    அவர்கள் அந்த அலு வலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் போலீசார், பாது காப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக தக்கலை சப்-கலெக்டர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையில் போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர்களுடன், தக்கலை தாசில்தார் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    • 150 கிராம அலுவலர்கள் பங்கேற்பு
    • அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம்

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் வட்டம் கீழ்மிடாலம் பி கிராம நிர்வாக அலுவ லராக ராஜேஷ் என்பவர் பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் அவர், திடீரென பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் நாகேஸ்வரன், பொருளாளர் ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த போராட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் திருவட்டார், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய வட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், 40 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.

    மேலும் இன்று 11-ந்தேதி அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடு கின்றனர்.

    ×