search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடற் தகுதி தேர்வு"

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • கேமரா காட்சிகள் கண்காணிக்கப்பட்டது

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு. வாரியத்தின் மூலம், சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவ தற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது.

    இதில் ஆயுதப்படை, தாலுகா மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித் தேர்வில் 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    இதில் மொத்தம் 513 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் முதல் நாளான நேற்று 453 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உயரம், மார்பளவு, 1500 மீ ஓட்டமும் நடந்தது. இந்த முதற்கட்ட உடற் தகுதி தேர்வில் 359 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    2-வது நாளான இன்று காலை 6 மணி அளவில் தீவிர பரிசோதனைக்கு பிறகு தேர்வர்களை உள்ளே அனுமதித்தனர். முதல் நாளான நேற்று தேர்ச்சி பெற்ற பொது பிரிவை சேர்ந்த 204 பேருக்கு 2-ம் கட்டமாக கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100 மீ, 400 மீ ஓட்டம் உள்ளிட்டவை நடந்தது.

    வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் எஸ்.பி. மணிவண்ணன் மேற்பார்வையில் ஏ.டி.எஸ். பி.கள், டி.எஸ்.பி.கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணி யாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடி படை ஐ.ஜி.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ப்பட்டு கண்கா ணிக்கப்பட்டது.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நாளை நடக்கிறது
    • செல்போனுக்கு தடை - ஆடை கட்டுப்பாடு

    வேலூர்:

    தமிழகத்தில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உட்பட 621 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு உடற் தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது.

    அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 513 நபர்களுக்கு உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் நாளையும், நாளை மறுநாளும் (8-ந் தேதி) நடக்க உள்ளது. இதற்காக, அவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மேற்பார்வையில் நடக்கும் உடற்தகுதி தேர்வில் நாளை உயரம், மார்பளவு மற்றும் 1,500 மீ ஓட்டம் ஆகியவையும், 8-ந் தேதி உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், கையிறு. ஏறுதல், 100 மற்றும் 400மீ. ஓட்டம் ஆகியவை நடக்கிறது.

    வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடிப்படை ஐ.ஜி முருகன் நியமனம் செய் யப்பட்டுள்ளார்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    உடற்தகுதி தேர்வில் பங்கேற்கும் நபர் கள் செல்போன் எடுத்து வரவும், ஒரே மாதிரியான உடை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடற் தகுதி தேர்வு நடக்கும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    தேர்வு மையத்துக்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்க ப்படு வார்கள். வெளிநபர்கள் தேர்வு மையத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இவர் அவர்கள் தெரிவித்தனர்.

    • உடல் திறனாய்வு தேர்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.
    • காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடற்கல்வி ஆசிரியர்களை பாராட்டினார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடந்தது.இதில் தேர்ச்சி பெற்று தகுதியான விண்ணப்பதாரர்கள் 931 பேருக்கு உடற் தகுதி தேர்வு மற்றும் உடல் திறனாய்வு தேர்வு கடந்த 6-ந் தேதி முதல் நேற்று.வரை தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் உடற் தகுதி தேர்வு மற்றும் உடற் திறனாய்வு தேர்வின் போது காவல்துறையினருக்கு உறுதுணையாக பணியாற்றிய மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள் 20 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,காவல் துணை கண்காணிப்பா ளர்கள் மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு கல்பனா,தூத்துக்குடி . சத்தியராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    ×