search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 305570"

    • ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    • ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    2 மாத காலமாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருந்தது. போட்டிகளை வீட்டில் இருந்தே டி.வி., செல்போன்கள், இணையதளங்கள் மூலம் கண்டுகளித்த ரசிகர்கள், தங்களை உற்சாகப்படுத்தி கொள்ள பல்வேறு உணவு பொருட்களையும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர்.

    போட்டிகளை பிரியாணி விருந்துடனும், பல்வேறு சுவையான உணவு பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி சுவைத்தும், திருவிழா போல கொண்டாடியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான ஸ்விகி டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

    அதில், ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அதாவது நிமிடத்திற்கு 212 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடம் பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த சீசனில் கொல்கத்தாவில் ஒருவர் ஆர்டர் செய்த உணவை 77 வினாடிகளுக்குள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரங்களை பொறுத்தவரை பெங்களூருவில் தான் அதிகளவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி மட்டுமல்லாமல் சமோசா, ஷாக்கர், தாகி, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களும் ஸ்விகியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்விகி இன்ஸ்டா மார்ர்ட் மூலம் 2,423 காண்டங்களும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 3,641 யூனிட் தாகி மற்றும் 720 யூனிட் ஷக்கர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு ரசிகர் மட்டும் 701 சமோசாக்களை ஆர்டர் செய்துள்ளார்.

    இது, இந்த சீசனில் தனி நபர் ஒருவர் அதிகம் ஆர்டர் செய்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஸ்விகியின் உணவு வினியோகிப்பாளர்கள் மொத்தம் 33 கோடி கிலோ மீட்டர்கள் இந்த சீசன் முழுவதும் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாய் சுதர்சன் இன்றைய ஆட்டத்தின் மூலம் 21 வயது 226 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
    • சுப்மான் கில் 22 வயது 37 நாட்களிலும் ரிஷப் பண்ட் 23 வயது 37 நாட்களிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

    குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் எம். எஸ் டோனி.

    அவர் நினைத்தவாறு பந்துவீச்சு அமையாத காரணத்தினால் குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது.

    சுப்மான் கில்தான் அதிகமாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார் சாய் சுதர்சன்.

    ஐபிஎல் போட்டியில் மிக இளம் வயதில் 50 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு முன் 20 வயது 318 நாட்களில் மனன் வோரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

    சாய் சுதர்சன் இன்றைய ஆட்டத்தின் மூலம் 21 வயது 226 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    சுப்மான் கில் 22 வயது 37 நாட்களிலும் ரிஷப் பண்ட் 23 வயது 37 நாட்களிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

    ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

    வாட்சன் 2018-ம் ஆண்டு ஆட்டம் இழக்காமல் 117 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

    சகா 2014-ம் ஆண்டு 115 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    தற்போது சுதர்சன் 96 ரன்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.

    மற்றொரு தமிழக வீரரான முன்னாள் வீரர் முரளி விஜய் 2011-ம் ஆண்டு 95 ரன்கள் குவித்து 4-வது இடத்தில் உள்ளார்.

    மனிஷ் பாண்டே 94 ரன்கள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணிக்கு விளையாடாத வீரர் ஒருவர் பிளே ஆப்ஸ் சுற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

    ஆர்சிபி வீரர் ராஜத் படித்தார் சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 170 - 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
    • 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.

    கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.

    குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    170 - 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.

    முதலில் ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். ருதுராஜ் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், அங்கு திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சிஎஸ்கே பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில், இறுதிப்போட்டி முழுமையாக முடியுமா அல்லது போட்டி ரத்து செய்யப்படுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    • ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் நாளை மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கிரிக்கெட் மைதானத்திற்கு போட்டியை காண ஆவலுடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறி வருகின்றனர்.

    ஐ.பி.எல் 2023 தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன.

    இன்று மாலை 7.30 மணியளவில் டாஸ் போட இருந்த நிலையில், கனமழை காரணமாக டாஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டது.

    இரவு 9.30 மணிக்கு முன்னதாக மழை நின்றால் போட்டி 20 ஓவர்களுக்கு தொடரும் என்றும், இரவு 12 மணிக்குள் மழை நின்றால் போட்டி 5 ஓவர்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அகமதாபாத்தில் இன்னும் மழை முழுவதுமாக நிற்காத நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் நாளை மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளையும் போட்டி நடைபெறும் சூழல் இல்லாதபட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இதனால், கிரிக்கெட் மைதானத்திற்கு இறுதிப்போட்டியை காண ஆவலுடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

    • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
    • இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்துடன் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்.

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 16வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கான குவாலிபயர் 2 போட்டியில் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    ஏற்கனவே, பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்த சென்னை அணியை குஜராத் எதிர்கொள்ள உள்ளது. இதன் மூலம் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்துடன் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியின் முடிவில் குஜராத் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா ? அல்லது நடப்பு சாம்பியனிடம் இருந்து பட்டத்தை சென்னை தன்வசமாக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    • மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 16வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கான குவாலிபயர் 2 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    ஏற்கனவே, பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்த சென்னையை களத்தில் சந்திக்க குஜராத் அணியும் குவாலிஃபயர் 2 வெற்றியின் மூலம் தயாராகவுள்ளது.

    இதன் மூலம் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

    இறுதிப்போட்டியில் வெல்லும் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும். சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    போட்டியின் முடிவில் குஜராத் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா ? அல்லது நடப்பு சாம்பியனிடம் இருந்து பட்டத்தை சென்னை தன்வசமாக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    • 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆகாஷ்.
    • 2018ல் இருந்து என்னுடைய வாய்ப்பிற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன்.

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    அடுத்தடுத்து ஏற்பட்ட ரன் அவுட் உள்ளிட்ட காரணங்களால் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களிலேயே ஆட்டத்தை இழந்தது.

    இதில், மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    இதுகுறித்து ஆகாஷ் மத்வால் கூறியதாவது:-

    என்னுடைய இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன். ஆனால் என்னுடைய விருப்பம் கிரிக்கெட்டாக இருந்தது. 2018ல் இருந்து என்னுடைய வாய்ப்பிற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன். வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவேன் என்று நம்புகிறேன். இன்ஜினியர்கள் விரைவாக கற்றுக்கொள்பவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிளே ஆப் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஓய்வு குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் டோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
    • "இங்கே மீண்டும் சேப்பாக்கத்தில் வந்து விளையாடுவீர்களா?" என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    ஐபிஎல் தொடரில் 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையையும் சிஎஸ்கே படைத்துள்ளது.

    சென்னை அணியுடனான நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் வரும் 26ம் தேதி நடைபெறும் குவாலிஃபயர் 2ல் விளையாடும்.

    இந்நிலையில், பிளே ஆப் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஓய்வு குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் டோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    "இங்கே மீண்டும் சேப்பாக்கத்தில் வந்து விளையாடுவீர்களா?" என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தோனி நேரடியாக பதில் அளிக்கவில்லை என்றாலும், ஐபிஎல் முடிந்தவுடன் தனது விளையாட்டு குறித்து உடனடியாக முடிவு செய்யமாட்டேன் என்று தெளிவாக பதிலளித்துள்ளார்.

    இதுகுறித்து டோனி மேலும் கூறியதாவது:-

    ஓய்வு குறித்து எனக்கு தெரியாது. அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்திற்கு இன்னும் 8, 9 மாதங்கள் இருக்கிறது. எனவே இப்போது ஏன் அது பற்றி யோசிக்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி. விளையாட்டிலோ அல்லது வெளியே எங்கேயாவது உட்கார்ந்தோ நான் எப்போதும் சென்னை அணிக்காக இருப்பேன்.

    வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நான் இப்போது நான்கு மாதங்களாக ஃபார்மில் இல்லை. ஜனவரி 31ம் தேதி நான் எனது வேலையை முடித்துவிட்டு மார்ச் 2-3ம் தேதிகளில் பயிற்சி செய்யத் தொடங்கினேன். ஓய்வு குறித்து முடிவெடுக்க நிறைய நேரம் எடுக்கும். எனக்கு போதுமான நேரம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2022-ம் ஆண்டு முழுவதும் இந்தியாவுக்காக 15 ஆட்டங்களில் மட்டுமே சாஹர் விளையாடினார்.
    • காயம் காரணமாக 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையிலிருந்தும் வெளியேறினார்.

    'Fully fit and preparing well for IPL 2023' - Deepak Chahar on his comeback from twin injury setbacksஇந்திய அணியின் 30 வயதான வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தில் இருந்து மீள்வதற்கு நீண்ட நாள்கள் எடுத்துக் கொண்டார். அவர் கடைசியாக வங்கதேசத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். அங்கு அவர் மூன்று ஓவர்கள் வீசிய பிறகு வெளியேறினார்.

    2022-ம் ஆண்டு முழுவதும், சாஹர் இந்தியாவுக்காக 15 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். மேலும் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

    இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெற்ற சாஹர், ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

    கடந்த ஆண்டு இரண்டு பெரிய காயங்களுடன் போராடிய பிறகு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், மார்ச் 31 -ம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக்குக்கு மீண்டும் வர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

     

    இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய வீரர்களை விளாசியுள்ளனர். அது எப்படி ஐபிஎல் தொடருக்கு மட்டும் அனைத்து வீரர்களும் காயத்தில் இருந்து மீண்டு விடுகிறார்கள் என்று ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா காயம் காரணமாக கடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்பில் இருந்து தற்போது வரை ஓய்வில் இருக்கிறார்.

    ×