என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்திய அரசு அனுமதி"
- ஆகஸ்டு 22-ந்தேதி மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார்.
- பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த மாதம் 4-வது வாரம் அவர் அமெரிக்கா செல்ல முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது.
இப்போது வருகிற சுதந்திர தினத்தன்று 15-ந்தேதி கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வது என்று முடிவாகி உள்ளது. அதன்படி ஆகஸ்டு 22-ந்தேதி அவர் அமெரிக்கா புறப்படுகிறார்.
மாநில முதல்-அமைச்சர் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வதற்கு முன்பு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசி டம் அனுமதி கோரப்பட்டது. அதன்படி 15 நாட்கள் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சரின் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அவருக்காக அமெரிக்க தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கும் தூதரகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில்துறை செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர் என ஒரு குழு அமெரிக்கா பயணத்துக்கு தயாராகி வருகிறது.
அமெரிக்கா செல்லும்போது கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை துணை முதல்-அமைச்சர் ஆகி விடுவார் என்று மீண்டும் தகவல்கள் வரத் தொடங்கி உள்ளது.
சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாடு செல்லும்போது அங்கிருந்தபடி அவரே தமிழக நிர்வாகங்களை கவனிப்பார் என்றும் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரியவந்து உள்ளது.
- பெங்களூர் மெட்ரோ ரெயில் சேவை பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகிறது.
- மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் செல்லகுமார் எம்.பி. நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூர் மெட்ரோ ரெயில் சேவை பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகிறது. பொம்மசந்திராவிலிருந்து அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
இதுதொடர்பாக நான் ஏற்கனவே பெங்களூர் மெட்ரோ ரெயில் நிறுவன தலைவர், கர்நாடகா முதல் மந்திரி மற்றும் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது,
இத்திட்டம், 2 மாநில அரசு பகுதிகளை இணைக்கும் திட்டம். மெட்ரோ ரெயில் சேவைக்கான செலவு அதிகமாக இருப்பின் அதே பயனுடன் ஆனால் குறைந்த செலவினமான மெட்ரோ லைட் திட்ட சேவையை செயல்படுத்தினால் போதும். இரு மாநில அரசின் பங்கேற்பு மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு சேர்ந்து செயல்படுத்த வேண்டும் வலியுறுத்தினேன். தொடர்ந்து, தமிழக அரசு ஓசூர் மெட்ரோ ரெயில்வே திட்ட அளவீடு பணிக்காக ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில், மெட்ரோ ரெயில் திட்டத்தின் கொள்கைகள், விதிகளை பார்க்கும் போது, இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த முடியாது என மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டம் கைவிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை செயலாளரை நேரில் சந்தித்து இத்திட்டம் மீண்டும் செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்து உரிய ஆதாரம், ஆவணங்களுடன் பேசினேன்.
இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் 21&ந் தேதி, மத்திய நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர், ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து கொள்கை அளவில் ஆய்வு பணிகள் மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசுக்கு கடிதம் வந்துள்ளது.
எனவே, ஆய்வு பணிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல் அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். ஓசூர் மெட்ரோ ரெயில் திட்டம் எந்த சூழ்நிலையிலும் கைவிட வாய்ப்பு இல்லை. மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட துணை தலைவர் சேகர், மாநில இளைஞரணி செயலாளர் விக்னேஷ் பாபு, மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் ஜேசு, அக.கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர்கள் லலித் ஆண்டனி, முபாரக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்