search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைப்பு சாரா தொழிலாளர்கள்"

    • 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
    • ஆதரவும் இல்லாத அவர்களுக்கு தமிழக அரசு தான் துணையாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீபஒளி திருநாளுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்களும், அவர்களுக்கும் கீழாக உள்ள தொழிலாளர்களும் தீப ஒளித் திருநாளைக் கொண்டாட கையில் பணமில்லாமல் தடுமாறுவது வருத்தமளிக்கிறது.

    தீப ஒளிக்காக ஊக்கத்தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் விடுத்த வேண்டுகோள்கள் அரசின் செவிகளில் விழாதது ஏமாற்றமளிக்கிறது.

    அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாரத்தில் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் மட்டும் தான் வேலை கிடைக்கிறது. அதைக் கொண்டு தான் அவர்கள் வாரம் முழுவதும் வாழ்க்கை நடத்த வேண்டும்.

    அதற்கே அவர்களுக்கு வருமானம் போதாது எனும் நிலையில், அவர்களால் தீப ஒளிக்காக புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வாங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று. எந்த ஆதரவும் இல்லாத அவர்களுக்கு தமிழக அரசு தான் துணையாக இருக்க வேண்டும்.

    புதுவையில் தீப ஒளி திருநாளையொட்டி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா 5000 ரூபாயும், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.

    அனைத்து செலவுகளுக்கும் மத்திய அரசை நம்பியிருக்கும் புதுவை அரசால் இதைச் செய்ய முடியும் போது தமிழக அரசால் ஏன் செய்ய முடியாது? என்ற வினா எழுகிறது. அந்த வினா மிகவும் நியாயமானது தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    அமைப்பு சாராத் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீப ஒளி திருநாளைக் கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

    அதை நிறைவேற்றும் வகையில், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் வாயிலாக அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுசெயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி உறுப்பினர் அட்டை வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் வைப்பார் ஊராட்சி தலைவர் சக்கம்மாள் ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு முறை சாரா தொழிலாளர் காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தமிழ்நாடு கட்டுமான மற்றும் உடல் உழைப்பு (அமைப்புசாரா) தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வைப்பார் சமுதாய நல கூட்டத்தில் நடைபெற்றது.

    ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுசெயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமை தாங்கி இலவசமாக உறுப்பினர் அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் வைப்பார் ஊராட்சி தலைவர் சக்கம்மாள் ராமர், கிராம தர்மகர்த்தா வீரமல்லு, சமுதாய தலைவர் முத்துராமலிங்கம், ஐ.என்.டி.யூ.சி. வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் முருகதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×