search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யா அவதார தினம்"

    • தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
    • நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தென்தாமரைகுளம் :

    தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் கன்னியாகுமரி வந்தார். இதையடுத்து மாலையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி சென்றார். அங்கு அவரை தலைமைபதி சார்பில் குருமார்கள் சாமி, தங்க பாண்டியன், ராஜசேகர், அரவிந்த், ஆனந்த், அஜித் ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து வடக்கு வாசல் வழியாக பதிக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் அய்யா வைகுண்டரை சாமி தரிசனம் செய்தார். அவருக்கு இனிமம் வழங்கப்பட்டது.

    அதன்பின் அவர் பேசியதாவது:-

    தே.மு.தி.க. ஆட்சியாக இருந்திருந்தால் இந்த இடத்திலே மாசி 20 அய்யா வைகுண்டர் அவதாரதினத்தன்று பொது விடுமுறை அறிவித்திருப்போம். மாசி 20 பொது விடுமுறையாக அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

    இங்கு உருவ வழிபாடு இல்லை. கண்ணாடி வைத்து அதில் நமது முகமே தெரிகிறது. அது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. தலைவர் விஜயகாந்த் சொல்வது போல் இங்கு நமக்குள் மதம், ஜாதி, இனம், மொழி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரே இனம், ஒரே குலம் என்பது தான் இங்கு தத்துவம். விஜய காந்த் மீண்டும் அதே கம்பீரத்துடன் இங்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய அய்யாவிடம் பிரார்த்தனை செய்துள்ளேன். ஒரு உயர்ந்த கொள்கை தத்து வத்துடன் இக்கோவில் அமைந் துள்ளது. தமிழ்நாட்டிலேயே எல்லோரும் சமம் என்கிற ஒரு தலமாக நான் இதை பார்க்கிறேன். அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தது மன நிறைவாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நாளை நடக்கிறது

    கன்னியாகுமாரி: 

    அய்யா வைகுண்ட சுவாமி யின் 191-வது அவதார தினம் நாளை மறுநாள் (4-ந்தேதி) நடக்கிறது.

    அய்யா வைகுண்ட சுவாமி யின் அவதார தினத்திற்கு முந்திய தினமான நாளை (3-ந்தேதி) காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி ஒன்று புறப்படுகிறது. இந்தப் பேரணிக்கு ஜனா. வைகுந்த், பையன் அம்ரிஷ், கவுதம் ராஜ் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    இந்த பேரணி திருச்செந் தூர் சீர்காய்ச்சி, திசையன் விளை, உடன்குடி, கூடங் குளம், செட்டிகுளம், ஆரல் வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் வந்த டைகிறது. அதேபோல் நாளை காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு. பத்ம நாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து சாமிதோப்பை நோக்கி மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இந்த வாகன பேரணியை பாலலோகாதிபதி ெதாடங்கி வைக்கிறார். பையன் நேம்ரிஷ் தலைமை தாங்குகிறார்கள்.

    இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாற சாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து வைகுண்ட தீபம் கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்குகிறார். நாகராஜா திடலில் நாளை இரவு 10 மணிக்கு மாசி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்குகிறார்.

    வைகுண்ட சுவாமியின் அவதார தினமான நாளை மறுநாள் (4-ந்தேதி) காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கிப் புறப்படுகிறது. இந்த ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். ஜனாயுகேந்த் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை. வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடை கிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி யில் இருந்தும் வெளி மாநிலங் களில் இருந்தும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை மறுநாள் (4-ந்தேதி) இரவு சாமிதோப்பு தலைமை பதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது.

    • அய்யா வைகுண்ட சுவாமியின் 191-வது அவதார தினம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடைகிறது.

    தென்தாமரைகுளம்:

    அய்யா வைகுண்ட சுவாமியின் 191-வது அவதார தினம் நாளை மறுநாள் (4-ந்தேதி) நடக்கிறது.

    அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தினத்திற்கு முந்திய தினமான நாளை (3-ந்தேதி) காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி ஒன்று புறப்படுகிறது. இந்தப் பேரணிக்கு ஜனா. வைகுந்த், பையன் அம்ரிஷ், கவுதம் ராஜ் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    இந்த பேரணி திருச்செந்தூர் சீர்காய்ச்சி, திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் வந்தடைகிறது. அதேபோல் நாளை காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு, பத்ம நாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து சாமிதோப்பை நோக்கி மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இந்த வாகன பேரணியை பாலலோகாதிபதி தொடங்கி வைக்கிறார். பையன் நேம்ரிஷ் தலைமை தாங்குகிறார்கள்.

    இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாற சாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து வைகுண்ட தீபம் கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்குகிறார்.

    நாகராஜா திடலில் நாளை இரவு 10 மணிக்கு மாசி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்குகிறார்.

    வைகுண்ட சுவாமியின் அவதார தினமான நாளை மறுநாள் (4-ந்தேதி) காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கி புறப்படுகிறது.

    இந்த ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். ஜனாயுகேந்த் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை மறுநாள் (4-ந்தேதி) இரவு சாமிதோப்பு தலைமை பதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது.

    ×