search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாத்மா காந்தி சிலை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
    • பாராளுமன்றத்தில் அம்பேதகர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன்.

    பழைய பாராளுமன்றத்தில் விரவி இருந்த தலைவர்களின் சிலைகள் அவ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு புதிய பாராளுன்றத்தின் பின்புறத்தில் 'பிரேர்னா' ஸ்தல் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்திரபதி சிவாஜி உள்ளிட்ட 50 பேரின் சிலைகள் இதில் அடங்கும்.

     

     

    பிரேர்னா ஸ்தல் பூங்காவை நேற்று {ஜூன் 16) துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார். தலைவர்களின் சிலைகளை இடம் மாற்றும் முடிவுக்கு தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இடமாற்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், யாரிடமும் கருத்து கேட்காமல் எந்த ஒரு விவாதமும் இன்றி பாராளுமன்ற விதிகளுக்குப் புறம்பாக தலைவர்களின் சிலைகள் இடமாற்றும் செய்யப்பட்டுள்ளன. தலைவர்களின் சிலைகளை தன்னிச்சையாக இஷ்டத்துக்கு இப்படி இடம்மாற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. சுமார் 50 சிலைகள் இடம்மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

    முக்கியமாக மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகள் பாராளுமன்றத்துக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கிவந்தன. பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் முன்னாள் இருந்த மகாத்மா காந்தியின் தியான சிலை அருகே ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தும்போது உத்வேகம் அளிப்பதாய் இருந்தது.

     

    அம்பேத்கர் சிலை இந்திய அரசியலமைப்பின் சக்தியை உணர்த்துவதாக இருந்தது. 1960 களில் எனது கல்லூரிப் பருவத்தில் பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன். தற்போது இது அனைத்தையும் சீர்குலைக்கும் வகையில் அவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று விமர்சித்துள்ளார்.

    • விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றிய இடத்தில் நினைவு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • மகாத்மா காந்தி யாத்திரையாக வந்த இடத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது.

    மானாமதுரை

    சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியபின் சிவகங்கை மாவட்டம் மானா மதுரை வந்தார். பின்னர் ராமேசுவரம், பாம்பன் சென்றார். அவரது பயண ஏற்பாட்டைசெய்த ராமநாதபுரம் மன்னருக்கு நன்றி தெரிவித்தபின் பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம் சுவாமி ஆகிய இடங்கில் விவேகானந்தர் சொற்பொழிவு ஆற்றினார். அவர் மானாமதுரைக்கு வந்தபோது பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    அந்த இடம் மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் உள்ளது. சொற்பொழிவு ஆற்றியபின் அந்த பகுதியில் உள்ள வீட்டில் தங்கி மறுநாள் பயணத்தை தொடர்ந்தார். சுவாமி விவேகானந்தர் வந்து பேசிய இடத்தில் நினைவு பீடம் மட்டும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மானாமதுரைக்கு விவேகானந்தர் வந்த நாள் மற்றும் பிறந்த நாள், நினைவு நாளில் பூமாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டுவருகிறது.

    இதன் அருகே மகாத்மா காந்தி யாத்திரையாக வந்த இடத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இப்பகுதியில் நூலகம், சிறுவர் பூங்கா உள்ளது. இதேபோல் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு செய்த இடத்தில் நினைவு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    ×