search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனி பொழிவு"

    • தினமும் சரக்கு வாகனங்கள், பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • வேலைக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியை சுற்றி தலமலை, திம்பம், ஆசனூர் உள்பட பல்வேறு வன கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். மேலும் பலர் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனால் திம்பம், தாளவாடி மற்றும் பண்ணாரி வனப்பகுதி எப்போதும் பசுமையாகவே இருந்து வருகிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் இங்கு ஜில்லென குளிர்ந்த காற்று வீசி கொண்டே இருக்கும். மேலும் அதிகாலை நேரங்களில் பனி பெய்து கொண்டே இருக்கும்.

    இந்த வனப்பகுதியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த வழியாக தினமும் சரக்கு வாகனங்கள், பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சத்தி மற்றும் சுற்று வட்டார மலை கிராம பகுதிகளில் காலை நேரத்தில் வெயில் அடித்தாலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பனி பொழிவு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் மற்றும் தாளவாடி வனப்பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் அடிக்கிறது. அதே போல் இரவு நேரங்களில் பனி பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடி, திம்பம், தலமலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பனி பொழிவு இருந்தது.

    இதனால் இந்த பகுதி முழுவதும் பனி துளிகள் படர்ந்து பசுமையாக காட்சி அளித்தது. மேலும் இந்த பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்லும் மலை கிராம பொதுமக்கள் ஸ்சுவட்டர் மற்றும் குல்லா அணிந்த படியே சென்று வருகிறார்கள்.

    மேலும் பனி பொழிவு காரணமாக இன்று காலை வரை வனப்பகுதி சாலைகள் இருட்டாகவே காணப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இன்று அதிகாலை மற்றும் காலை நேரத்திலும் முகப்பு விள க்குகளை எரியவிட்டப்ப டியே சென்றனர். மேலும் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்லும் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • பருவநிலை மாற்றத்தால் மார்கழி தை முடிந்தும் வறட்சி பனிப்பொழிவும் கடும் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது.
    • செண்டுமல்லி முற்றிலும் விளைச்சல் தடைப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் முத்து கவுண்டன் கொட்டாய், கடகத்தூர், அதகபாடி, தொப்பூர், நார்த்தம்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், பாலக்கோடு, மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பூக்கள் பயிரிட்டு வருகின்றனர்.

    குறிப்பாக குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, செவ்வலரி, வெள்ளை அலரி, காக்கண்ணாம், சம்பங்கி மற்றும் சாமந்தி பூக்கள் அதிகப்படியாக சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் பெரும்பாலும் தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.

    இங்கிருந்து விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து, ஈரோடு, திருச்செங்கோடு, கோயம்புத்தூர், பெங்களூர், சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகரங்களுக்கு பிக்கப் வாகனம் மற்றும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் பூக்கள் தவிர மற்ற பூக்கள் அனைத்தும் தருமபுரி பூ மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் மார்கழி மாதத்தில் கடும் பனிப்பொழிவு இருந்து வரும் இந்த வருடம் பருவநிலை மாற்றத்தால் மார்கழி தை முடிந்தும் வறட்சி பனிப்பொழிவும் கடும் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது.

    இதனால் பூக்கள் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பூக்கள் விளைச்சல் இன்றி தினசரி மார்க்கத்திற்கு பெரும்பாலான குண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி, அரளி, கனகாம்பரம், உள்ளிட பூக்கள் வெகுவாக குறைந்துள்ளது.

    செண்டுமல்லி முற்றிலும் விளைச்சல் தடைப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் தொடர் பனிப்பொழிவும் கடும் வெயிலும் வாட்டி வதைப்பதால் பூக்கள் விளைச்சலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோடை முடிந்த பின்பு தான் பூக்களின் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×