search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commissioner’s"

    • பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது ஆய்வு செய்தார்.
    • ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தில்லையேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதி, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்ததுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் தாரேஸ் அகமது பொதுமக்களிடம் வீடு, வீடாக சென்று கேட்டறிந்தார்.

    முன்னதாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பார்த்திபனூர் பகுதியில் பயனாளிகளுக்கு நடமாடும் வாகனம் மூலம் சிகிச்சைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் அரியனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் மாசு நீர் சுத்திகரிப்பு பணி நடைபெற்று வருவதையும், அரியனேந்தல் ஆதிதிராவிடர் காலனியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், இந்திரா நகர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் செங்குத்து உறிஞ்சிக்குழி பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டார்.

    நெல்மடுவலூர் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார மையத்தின் கட்டுமான பணிகளையும், போகலூர் ஊராட்சி ஒன்றியம், பூவிளத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராம சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.46.57 லட்சம் மதிப்பீட்டில் 1,200 மீட்டர் தொலைவில் வணங்கானேந்தல் வழியாக பூவிளத்தூர் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், உதவி இயக்குநர் (தணிக்கை) அருள் சேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரமோகன், ரவி, போகலூர் செயற்பொ றியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர்கள் அழகேசன், கல்யாண சுந்தரம், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×