search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதம்பரேஸ்வரர்"

    • ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், கோவில் வெளி வாசலில் இருந்து சுமார் 40 அடி தூரத்தில் அமைந்துள்ள, கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுவது இக்கோவிலின் சிறப்பாகும்.
    • இந்த அதிசய சூரிய தரிச னத்தைக் காண உள்ளூரில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் - திருச்சி மெயின் ரோட்டில், கரைபோட்டான் ஆற்றின் கரையோரத்தில், ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    புராண சிறப்பு பெற்ற இக்கோவிலில், சிவனும், அம்பாளும் தெற்கு நோக்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்ற னர். மேலும் இக்கோவிலின் 4 கோபுரங்களும், உள்மண்ட பமும் பிரமிடு வடிவில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், கோவில் வெளி வாசலில் இருந்து சுமார் 40 அடி தூரத்தில் அமைந்துள்ள, கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுவது இக்கோவிலின் சிறப்பாகும். இந்த அதிசய சூரிய தரிச னத்தைக் காண உள்ளூரில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டு நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 13-ந் தேதி (மாசி 27, 28, 29) ஆகிய 3 நாட்கள், மூலவர் சிவனின் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை சுமார் 6.20 மணிக்கு தொடங்கி சுமார் 15 நிமிடம் வரை இந்த அபூர்வ நிகழ்வு நடைபெறும்.

    அதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தி னர் தெரிவித்துள்ளனர்.

    ×