search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை அலுவலக கட்டிடம்"

    • கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.
    • 39 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடப்பணி நடைபெற உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் புறவழிச்சாலையில் தாமரை நகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட அலுவலக 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடங்களை மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஜே.பி. நட்டா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தேசிய தலைமை அலுவலகத்திற்கு வந்த போது நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பா.ஜ.க. அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று அப்போதைய தேசிய தலைவர் அமித்ஷாவிடம் அறிவுறுத்தினார். கட்டிடப்பணி நான் அப்போது தேசிய பொதுச்செயலாளராக இருந்தேன்.

    தற்போது 290 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் 150 மாவட்டங்களில் கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 14 மாவட்ட அலுவலக கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாவட்டங்களுக்கு கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் 39 மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலக கட்டிடப்பணி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருதுநகரில் நடைபெற்ற திறப்பு விழாவில் மாவட்ட தலைவர் பென்டகன் பாண்டு ரங்கன் தலைமையில் மாநிலச்செயலாளர்கள் பொன் பாலகணபதி, பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்தனர்.

    இந்த விழாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜகோபால், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் சுப. நாகராஜன், பார்வையாளர் வெற்றிவேல், மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், கோபால்சாமி, மாவட்ட நிர்வாகிகள் ஈஸ்வரன், சீதாராமன், அழகர்சாமி ராஜா, மணிகண்டன், புஷ்ப குமார், செல்வகுமார் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×